பாலக்கீரை முறுக்கு

Published By: Digital Desk 7

09 Aug, 2022 | 08:33 PM
image

தேவையான பொருட்கள்

 

அரிசி மா - 1 கப்

கடமை மா - 1/4 கப்

பாலக் கீரை - 3/4 கப் நறுக்கியது

பச்சை மிளகாய் - 2

பட்டர் - 2 தேக்கரண்டி

ஓமம் - 1/2 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை

 

* பாலக் கீரையில் இருக்கும் காம்பு பகுதியை அதாவது நரம்பை நீக்கிவிட்டு பொடியாக நறுக்கிக் கொள்ளவும். 

* பச்சை மிளகாய், தண்ணீர்,  பாலக் கீரையையும் சேர்த்து நன்றாக அரைக்கவும்.

* ஒரு கிண்ணத்தில் அரிசி மா, கடலை மா, உப்பு, பெருங்காயம், பட்டர், ஓமம்  சேர்த்து கலக்கவும். 

* அரைத்த விழுதைச் சேர்த்து மேலும் சிறிது தண்ணீர் தெளித்து மிருதுவான மாவாகப் பிசையவும்.

* முறுக்கு அச்சில் நட்சத்திர வடிவம் கொண்ட தகட்டை பொருத்தி மாவை அதில் நிரப்பவும். 

* ஒரு தட்டில் எண்ணெய் தடவி அதில் சின்ன  சின்ன வட்டங்களாக முறுக்கைப் பிழியவும். எண்ணெய்யைச் சூடாக்கி பிழிந்து வைத்த முறுக்கை அதில் கவிழ்த்துப் போடவும். 

* அடுப்பை மிதமான தீயில் வைத்து முறுக்கை வேகவைத்து திருப்பி விடவும். 

* மேலும் தீயை குறைத்து சத்தம் முழுவதுமாக அடங்கும்வரை பொரித்து எடுக்கவும். சுவையான பாலக்கீரை முறுக்கு தயார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்