சர்வகட்சி அரசாங்கம் குறுகிய காலத்திற்கு வரையறுக்கப்பட்டு மக்கள் வாக்கெடுப்பிற்கு செல்ல வேண்டும் - முஜிபுர்

Published By: Vishnu

09 Aug, 2022 | 08:32 PM
image

(இராஜதுரை ஹஷான்,எம்.ஆர்.எம்.வசீம்)

பாராளுமன்றில் மக்களாணை திரிபடைந்துள்ளது என்பதை சர்வதேசம் நன்கு விளங்கிக்கொண்டுள்ளது என்பதை அறிந்ததன் காரணமாகவே ஜனாதிபதி சர்வக்கட்சி அரசாங்கத்தை ஸ்தாபிக்க முயற்சிக்கிறார்.

சர்வக்கட்சி அரசாங்கம் குறுகிய காலத்திற்கு வரையறுக்கப்பட்டு உடன் மக்கள் வாக்கெடுப்பிற்கு செல்ல வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளோம் என ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் முஜுபுர் ரஹுமான் சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றில் 09 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஜனாதிபதியின் சிம்மாசன உரை மீதான சபை ஒத்திவைப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தின் பலவீனமாக நிர்வாகத்தினால் ஏற்பட்ட நெருக்கடியின் காரணமாகவே  கடந்த மாதம்09 ஆம் திகதி நாட்டில் பாரிய எதிர்ப்பு போராட்டம் தலை தூக்கியது.மக்களின் போராட்டத்தின் காரணமாகவே கோட்டபய ராஜபக்ஷ ஜனாதிபதி பதவியை இராஜினாமா செய்தார்.

மே மாதம் 09ஆம் திகதி இடம் பெற்ற மக்கள் போராட்டத்தை தொடர்ந்து முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகினார்.மக்கள் போராட்டத்தை அரசியல்வாதிகள் ஒவ்வொரு விதமாக அடையாளப்படுத்துகிறார்கள்.ஆளும் தரப்பினர் இந்த போராட்டத்தை தீவிரவாத செயற்பாடு,அரசுக்கு எதிரான போராட்டம் என குறிப்பிடுகிறார்கள்.

கடந்த இரண்டரை வருடகால பலவீனமான நிர்வாகத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் போராட்டம் என எதிர்தரப்பினராக  நாங்கள் குறிப்பிடுகிறோம்.ஜனாதிபதி தனது சிம்மாசன உரையில் கடந்த அரசாங்கத்தின் ஊழல் மோசடிகள் தொடர்பில் ஆராய்வதாக குறிப்பிடவில்லை,அல்லது குறிப்பிட மறந்து விட்டார்.

ஆளும் தரப்பினரது ஆதரவுடன் ஜனாதிபதியாக பதவியேற்றுள்ளதால் அவரால் ஊழல் ஒழிப்பு தொடர்பில் குறிப்பிட முடியாமல் போயிருக்கும்.இளைஞர்களின் போராட்டத்தை முடக்கவது முறையற்றதாகும்.வன்முறையினை நாங்கள் அங்கிகரிக்கவில்லை. சட்டத்திற்கு விரோதமானவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறோம்.

மக்கள் போராட்டத்தின் நோக்கத்தை விளங்கிக் கொள்ளாவிடின் மக்கள் பிரதிநிதிகள் என குறிப்பிடுவது முறையற்றதாகி விடும். அரசியல்வாதிகள் தொடர்பில் மக்கள் மத்தியில் வெறுப்பு காணப்படுகிறது. 225 பாராளுமன்ற உறுப்பினர்களும் வேண்டாம் என குறிப்பிடுகிறார்கள்,பிறிதொரு தரப்பினர் 225 உறுப்பினர்களும் மோசமானவர்கள் இல்லை  இரு தரப்பிலும் சிறந்தவர்கள் இருக்கிறார்கள் என குறிப்பிடுபவர்கள் உள்ளார்கள்.

அரசியல்வாதிகள் சந்தர்ப்பத்திற்கு ஏற்றாட்போல் செயற்படுவதால் மக்கள் அரசியல்வாதிகளை ஒட்டுமொத்தமாக வெறுக்கிறார்கள். முறையற்ற அரசியல் கலாசாரத்திற்கு எதிராகவே இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுப்படுகிறார்கள்.அரசியல்வாதிகளின் முறையற்ற செயற்பாடுகள்,மோசடிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டத்தில் ஈடுப்படுகிறார்கள்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் சிம்மாசன உரையின் பலவிடயங்களை ஏற்றுக்கொள்கிறோம்.இருப்பினும் அவர் ஊழல் மோசடி தொடர்பில் குறிப்பிடவில்லை.போராட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் தெரிவு செய்யப்பட்;ட வகையில் கைது செய்யப்படுகிறார்கள்.காலி முகத்திடலில் போராட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் கைது செய்யப்படுவதால் எதனை பெற்றுக்கொள்ள முடியும்.

பாராளுமன்றத்தின் மக்களாணை முறையற்றதாக உள்ளது என்பதை சர்வதேச சமூகம் நன்கு விளங்கிக் கொண்டுள்ளது.இதன் காரணமாகவே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சர்வக்கட்சி அரசாங்கத்தை ஸ்தாபிக்க முயற்சிக்கிறார்.குறுகிய காலத்திற்குள் பாராளுமன்றத்தை கலைத்து மக்கள் வாக்கெடுப்பிற்கு செல்ல வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்துக்கொண்டு சர்வக்கட்சி அரசாங்கத்தை ஸ்தாபிக்க வேண்டும் என்பதை அரசாங்கம் விளங்கிக்கொள்ள வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55