10 இலட்சம் பெண்­க­ளுடன் பாலியல் உறவில் ஈடு­பட்­ட­தாக கூறும் மல்­யுத்த வீரர்

Published By: Vishnu

09 Aug, 2022 | 12:14 PM
image

அமெ­ரிக்­காவைச் சேர்ந்த முன்னாள் மல்­யுத்த வீரர் ஒருவர்,  தான் 10 லட்சம் பெண்­க­ளுடன் பாலியல் உறவில் ஈடு­பட்­டுள்­ள­தாகக் கூறி பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்ளார்.

மைக்கல் ஜோன்ஸ் எனும் இந்த மல்­யுத்த வீரர், 1985 ஆம் ஆண்டு போட்­டி­களில் அறி­மு­க­மா­னவர். உலக மல்­யுத்த சம்­மே­ள­னத்தின் (WWF) போட்­டி­களில் 8 வரு­டங்கள் பங்­கு­பற்­றி­யதன் மூலம் பெரும் புகழ் பெற்றார். மிஸ்டர் ஜோன்ஸ், லூசியஸ் பிரவுண் உட்­பட பல்­வேறு பெயர்­களில் அவர் போட்­டி­களில் பங்­கு­பற்­றினர். வேர்ஜில் எனும் பெயரில் அதிக பிர­ப­ல­மா­னவர். தற்­போது மைக்கல் ஜோன்­ஸுக்கு 71 வயது. 

இந்­நி­லையில், தான் இது­வரை சுமார் ஒரு மில்­லியன் பெண்­க­ளுடன் பாலியல் உற­வு­கொண்­டுள்­ள­தாக மைக்கல் ஜோன்ஸ் கூறினார். 

அண்­மையில் இணை­யத்­தளம் ஒன்­றுக்கு அளித்த நேர்­கா­ணலின் போது, அவர் இதனைத் தெரி­வித்தார்.

ரசி­கர்­களின் கேள்­வி­க­ளுக்கும் மைக்கல் ஜோன்ஸ் பதி­ல­ளித்தார். அப்­போது ரசிகர் ஒருவர், "இது­வரை எத்­தனை பெண்­க­ளுடன் உறவு கொண்­டுள்­ளீர்கள்" என கேள்வி எழுப்­பினார். 

அக்­கேள்­விக்கு மைக்கல் ஜோன்ஸ் பதி­ல­ளிக்­கையில், "எனக்குத் தெரி­ய­வில்லை. உல­க­ளா­விய ரீதி­யிலா? பெரும்­பாலும் ஒரு மில்­லி­ய­னாக இருக்கும்" என்றார்.

நேர்­காணல் நிகழ்ச்­சியை நடத்­திய வின்னி வேகாஸ், "வேர்ஜில், ஒரு மில்­லி­யனா" என ஆச்­ச­ரி­யத்­துடன் கேள்வி எழுப்­பிப்­பினார்.

அப்­போது, 'ஆம், உலகில் எத்­தனை பேர் இருக்­கி­றார்கள் எனத் தெரி­யும்­தானே' மைக்கல் ஜோன்ஸ் பதி­ல­ளித்தார்.

நிகழ்ச்சி  நடத்­துனர் வின்னி வேகா­ஸுக்கு சந்­தேகம் தீர­வில்லை. 'அதா­வது நீங்கள் ஒரு மில்­லியன் பேருடன் பாலியல் உறவு கொண்­டுள்­ள­தாக இப்­போது என்­னிடம் கூறு­கி­றீர்கள்' என அவர் மீண்டும் கேள்வி எழுப்­பினார்.

அப்­போது, அப்­படி இருக்­கக்­கூடும் என மைக்கல் ஜோன்ஸ் பதி­ல­ளித்தார். அப்­போது இது ரிக் பிளெயர் கூறிய எண்­ணிக்­கை­யை­விட அதிகம் என வின்னி வேகாஸ் கூறினார். 

மல்­யுத்­தத்தில் பல சம்­பியன் பட்­டங்­களை வென்ற பிர­பல வீரர் ரிக் பிளெயர் (73) (ரிச்சர்ட் பிளெயர்) தனது மல்­யுத்த வாழ்க்கைக் காலத்தல் 10,000 இற்கும் அதி­க­மான பெண்­க­ளுடன் பாலியல் உற­வு­கொண்­ட­தாக கூறி பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­யவர். இவ்­வி­ட­யத்­தையே வின்னி வேகாஸ் சுட்­டிக்­காட்­டினார்.

மைக்கல் ஜோன்ஸ் நம்­பிக்­கை­யுடன் அப்­படி கூறி­னாலும், அவரின் மதிப்­பீடு குறித்து பார்­வை­யா­ளர்கள் பலர் சந்­தேகம் தெரி­வித்­துள்­ளனர்.

இது தொடர்­பாக கருத்துத் தெரி­வித்த ஒருவர், 'சரி. நூன் ஒரு கணக்கு செய்தேன். வேர்ஜில் (மைக்கல் ஜோன்ஸ்) 1951 ஏப்ரல் 7 ஆம் திகதி பிறந்­தவர். ஒரு மில்­லியன் பெண்­க­ளுடன் அவர் இருப்­ப­தென்றால்  பிறந்த நாளி­லி­ருந்து ஒவ்­வொரு 37.5 நிமி­டமும் ஒரு பெண்ணுடன் இருந்­தி­ருக்க வேண்டும்' எனக் குறிப்­பிட்­டுள்ளார்.

மற்றொருவர், மைக்கல் ஜோன்ஸின் 40 வருடங்களுக்கு மேலான மல்யுத்த வாழ்க்கைக் காலத்தை கருத்திற் கொண்டால் தினமும் 60 இற்கும் அதிகமானோருடன் அவர் உறவு கொண்டிருக்க வேண்டும்' எனக் குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right