ஆவா குழுவின் பின்னணியில் முன்னாள் புலி உறுப்பினர்கள் : விசாரணயில் CID அதிர்ச்சி தகவல்

Published By: Robert

09 Nov, 2016 | 11:22 AM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

யாழ்ப்­பாணம் உள்­ளிட்ட முழு வடக்­கை யும் அச்­சு­றுத்தும் 'ஆவா குறூப்' எனும் குழு வின் பின்­ன­ணியில் முன்னாள் தமி­ழீழ விடு­தலைப் புலி உறுப்­பி­னர்­களே உள்­ள­தா­கவும் அவர்­க­ளது ஆலோ­ச­னை­க­ளுக்கு அமை­வா­கவே அக்­குழு செயற்­பட்­டுள்­ள­தா­கவும் பயங்­க­ர­வாத புல­னாய்வுப் பிரிவு நேற்று கொழும்பு நீதிவான் நீதி­மன்­றுக்கு அறிக்கை சமர்­ப்பித்­தது. 

ஆவா குழு தொடர்பில் சிறப்பு விசா­ர­ணை­களை முன்­னெ­டுக்கும் பயங்­க­ர­வாத புல­னாய்வுப் பிரிவின் சிறப்பு விசா­ரணைக் குழுவின் விசா­ரணை அதி­கா­ரி­யான உப பொலிஸ் பரி­சோ­தகர் புஷ்­ப­கு­மார, இந்த விவ­காரம் தொடர்பில் பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்தின் கீழ் கைதான மூன்று சந்­தேக நபர்­களை கொழும்பு மேல­திக நீதிவான் நிஸாந்த பீரிஸ் முன்­னி­லையில் ஆஜர் செய்தபின்னரே மேற்­படி விடயம் உள்­ள­டங்­கிய அறிக்­கையை மன்­றுக்கு சமர்­பித்தார்.

தமி­ழீழ விடு­தலைப் புலி­களின் முன்னாள் உறுப்­பி­னர்­க­ளுடன் இணைந்து  'ஆவா குரூப்' எனும் பெயரில்  ஆயுதக் குழு­வொன்றை உரு­வாக்கி அர­சுக்கு அசெ­ள­க­ரியம் ஏற்­படும் வண்ணம் செயற்­பட்­ட­தாக சந்­தே­கிக்­கப்­படும் மூவரே இவ்­வாறு தம்மால் கைது செய்­யப்பட்­ட­தாக மன்றில் ஆஜ­ரான உப பொலிஸ் பரி­சோ­தகர் நீதிவான் நிஸாந்த பீரிஸின் கவ­னத்­துக்கு கொண்­டு­வந்தார். 

இந் நிலையில் கைதா­ன­வர்­களை பயங்­க­ர­வாத தடை சட்­டத்தின் 7 (1) ஆவது அத்­தி­யா­யத்தின் பிர­காரம் தடுப்புக் காவலில் வைத்து தாம் விசா­ரணை செய்­த­தா­கவும் அதன்­படி குறித்த சட்­டத்தின் 7 (2) ஆவது அத்­தி­யா­யத்­துக்கு அமை­வாக இன்று ( நேற்று) மன்றில் ஆஜர் செய்து விளக்­க­ம­றி­யலில் வைக்கக் கோரு­வ­தா­கவும் உப பொலிஸ் பரி­சோ­தகர் நீதிவான் நிஸாந்த பீரி­ஸிடம் தெரி­வித்தார்.

இதன்­போது அவர் நீதி­வா­னிடம் தாம் முன்­னெ­டுத்த விசா­ர­ணை­களின் அறிக்கை ஒன்­றி­னையும் சமர்­பித்தார்.

அவ்­வ­றிக்­கையில் குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­த­தா­வது,

' தமி­ழீழ விடு­தலைப் புலிகள் இயக்க உறுப்­பி­னர்­க­ளுடன் இணைந்து அவர்­க­ளுடன் தொடர்­பு­களைப் பேணி அவர்­களின் ஆலோ­ச­னை­க­ளுக்கு அமை­வாக விடு­தலைப் புலிகள் அமைப்பை மீள உரு­வாக்­கு­வ­தற்கு உதவி ஒத்­தாசை புரியும் முக­மாக  ஆவா எனும் பெயரில் ஆயுதக் குழு உரு­வாக்­கப்பட்­டுள்­ளது. இந்த குழு­வா­னது வடக்கில் கட­மையில் ஈடு­பட்­டுள்ள உளவுத் துறை­யினர் உள்­ளிட்ட பொலிஸ் உத்­தி­யோ­கத்­தர்கள், அரச உத்­தி­யோ­கத்­தர்கள் மற்றும் பொது மக்­களை அச்­சு­றுத்தும் வண்ணம் செயற்­ப­டு­கின்­றனர். 

கூர்­மை­யான ஆயு­தங்­களால் வெட்டி காயம் ஏற்­ப­டுத்தும் இந்த குழு அச்­செ­யற்­பாடு ஊடாக மக்­களை பய­மு­றுத்தி அவர்­க­ளது சொத்­துக்­களைக் கொள்­ளை­யி­டுதல் உள்­ளிட்ட சட்ட விரோத செயற்­பா­டு­க­ளையும் முன்­னெ­டுத்­துள்­ளது. இது தொடர்பில் பயங்­க­ர­வாத புல­ன­யவுப் பிரி­வுக்கு விசா­ரணை செய்யும் பொறுப்பு ஒப்­ப­டைக்­கப்பட்ட நிலையில் 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்­க­ர­வாத தடை சட்­டத்தின் 6(1) ஆவது அத்­தி­யா­யத்­துக்கு அமை­வாக விசேட விசா­ர­ணைகள் பயங்­க­ர­வாத புல­னாய்வுப் பிரி­வி­னரால் முன்­னெ­டுக்­கப்­பட்­டது. 

அந்த விசா­ர­ணை­களில் வெளிப்­ப­டுத்­தப்­பட்ட தக­வல்­க­ளுக்கு அமை­வாக  மூவரை நாம் கடந்த நவம்பர் 5 ஆம் திகதி கைது செய்தோம். கே.கே.எஸ். வீதி, கொக்­குவில் மேற்கு, யாழ்ப்­பாணம் பகு­தியைச் சேர்ந்த குட்டி எனப்­படும் சிவ­லிங்கம் கம­லநாத், யாழ். பண்டத்தரிப்பு பகு­தியைச் சேர்ந்த அரவிந் எனப்­படும் அன்டன் தாய்சஸ் அரவிந் அலக்ஸ், தெந்­தா­தரன் பிருந்­தவன் ஆகியோரே இவ்­வாறு கைது செய்யப்பட்டு கொழும்பு பயங்­க­ர­வாத புல­னாய்வுப் பிரிவு தலை­மை­ய­கத்தில் தடுத்து வைத்து விசா­ரணை செய்­யப்பட்­டனர். அதன்­பின்­ன­ரேயே இன்று (நேற்று) அவர்­களை மன்றில் ஆஜர் செய்­கின்றோம்.

இந்த சந்­தேக நபர்கள் விடு­தலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்­பி­னர்­க­ளுடன் தொடர்­பினை பேணி அவர்­களின் ஆலோ­சனை மற்றும் பங்­க­ளிப்­புக்கு அமை­வாக வடக்கில் ஆவா எனும் பெயரில் அமைப்­பொன்றை உரு­வாக்கி, அந்த அமைப்பின் உறுப்­பினர்­க­ளாக செயற்­பட்டு,  வாள், கத்தி உள்­ளிட்ட அபா­ய­க­ர­மான கூரிய ஆயு­தங்­களைப் பயன்­ப­டுத்தி அர­சாங்­கத்தை அசெ­ள­க­ரி­யத்­துக்கு உள்­ளாக்கும் வித­மாக  செயற்­பட்­டுள்­ளனர். இதற்­காக உத­வி­யுள்ள இவர்கள்  வடக்கில் கட­மையில் ஈடு­பட்­டி­ருந்த உளவுத்துறை பொலிஸார் மீது தாக்­குதல் நடத்­தி­யமை அவர்­க­ளுக்கு அச்­சு­றுத்தல் விடுத்­தமை மற்றும் அந்த பிர­தே­சத்தில் சேவை­யாற்றும்  பொலிஸார் உள்­ளிட்ட அரச உத்­தி­யோ­கத்­தர்­க­ளுக்கு கட­மையைச் செய்ய இடை­யூறு ஏற்­ப­டுத்தியமை, மக்­களை பய­மு­றுத்­தி­யமை, அவர்கள் மீது தாக்­குதல் நடத்­தி­யமை, கூரிய ஆயு­தங்களால் வெட்­டியும் கொத்­தியும் காயம் ஏற்­ப­டுத்­து­கின்றமை போன்ற செயற்­பா­டு­களில் ஈடு­பட்­டுள்­ளனர்.

இவற்றின் ஊடாக பொது மக்­க­ளி­­டையே சல­ச­லப்பை ஏற்­ப­டுத்தி அர­சாங்­கத்தை அசெ­ள­க­ரி­யத்­துக்கு உட்­ப­டுத்தும் சட்ட விரோத செயற்­பாட்­டினை சந்­தேக நபர்கள் முன்­னெ­டுத்­துள்­ளனர்.

இந்த சந்­தேக நபர்கள் தொடர்பில் செய்­யப்பட்ட மேல­திக விசா­ர­ணை­களில், ஆவா எனும் குறித்த குழுவில் தற்­போது 30 உறுப்­பி­னர்கள் உள்­ளமை தெரி­ய­வந்­துள்­ளது. இந்த அமைப்பின் உறுப்­பி­ன­ராக இருந்­து­கொண்டு யாழ்ப்­பாணம், சுன்­னாகம் உள்­ளிட்ட பகு­தி­களில் கட­மையில் ஈடு­படும் உளவுத் துறை உத்­தி­யோ­கத்­தர்­களை வாளால் வெட்டி காயம் ஏற்­ப­டுத்­தி­யமை, சுன்­னாகம் பொலிஸ் உத்­தி­யோ­கத்­தர்கள் மீது கூரிய ஆயு­தங்­களால் தாக்­கி­யமை, அப்­பி­ர­தே­சத்தின் வர்த்­த­கர்­க­ளிடம்  கப்பம் பெறுதல், கொள்ளை ஆகிய செயற்­பா­டு­களில் இவர்கள் ஈடு­பட்­டுள்­ள­மை தெரியவந்துள்ளது.

இந்த ஆவா குறூப் எனும் அமைப்பு யாழ்ப்­பாணம் உட்­பட வட பகு­தியில் பொது மக்­க­ளி­டையே இனம் மற்றும் மத ரீதி­யி­லான வேறு­பா­டு­களைத் தூண்டி எதிர்­வி­ளை­வு­களை ஏற்­ப­டுத்தும் வண்ணம் மக்­களை தூண்­டி­யுள்­ளமை விசா­ர­ணை­களில் உறு­தி­யா­கி­யுள்­ளது.

அதனால் இந்த அமைப்பைச் சேர்ந்த ஏனைய உறுப்­பி­னர்­களைக் கைது செய்­வ­தற்கும், அவர்கள் பயன்­ப­டுத்தும் வாள், கத்தி உள்­ளிட்ட கூர்­மை­யான ஆயு­தங்­க­ளுக்கு மேலதிகமாக  புலிகள் அமைப்பினால் வழங்கப்பட்ட ஆயுதங்கள் ஏதும் அவர்களிடம் இருப்பின் அவற்றைக் கைப்பற்றவும் சிறப்பு விசாரணைகள் தொடர்கின்றன.

அதனால் சந்தேக நபர்களை விளக்கமறியலில் வைக்கவும் ஏனைய கைதிகளில் இருந்து இவர்களை வேறுபடுத்தி வைக்கவும் உத்தரவு பிறப்பிக்குமாறும்  கோருகின்றோம்' என குறிப்பிடப்ப்ட்டிருந்தது.

இதனையடுத்து பயங்கரவாத புலனயவுப் பிரிவினர் மன்றில் முன்வைத்த கருத்துக்களை ஆராய்ந்த கொழும்பு மேலதிக நீதிவான் நிஸாந்த பீரிஸ் எதிர்வரும் நவம்பர் மாதம் 16 ஆம் திகதிவரை சந்தேக நபர்கள் மூவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பித்தார்.

Image result for ஆவா குழு

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41