நாளைய ஆர்ப்பாட்டத்தை தடை செய்யவும் - பொலிஸாரின் கோரிக்கையினை நிராகரித்த கொழும்பு நீதிமன்றம்

Published By: Digital Desk 4

08 Aug, 2022 | 08:11 PM
image

( எம்.எப்.எம்.பஸீர்)

அரசியல் கட்சி மற்றும்  பல்வேறு அமைப்புக்கள் நாளை (9) ஏற்பாடு செய்துள்ள அரசாங்கத்துக்கு எதிரான போராட்டத்துக்கு தடை விதிக்குமாறு, கறுவாத்தோட்டம் பொலிஸார் முன் வைத்த கோரிக்கையை, கொழும்பு பிரதான நீதிவான்  நத்தன அமரசிங்க இன்று  ( 8)  நிராகரித்தார்.

ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவோர் ஏதேனும் வன்முறைகளில் ஈடுபட்டால்,  பொலிஸ் அதிகாரத்தை பயன்படுத்தி மேலதிக நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும் என தெரிவித்தே நீதிவான் கறுவாத்தோட்டம் பொலிஸாரின் கோரிக்கையை நிராகரித்தார்.

நாளை 9 ஆம் திகதி , அரசாங்கத்துக்கு எதிராக அரசியல் கட்சி, பல்வேறு அமைப்புக்கள் இணைந்து கொழும்பு - விஹார மஹா தேவி பூங்கா அருகே  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாகவும்,  அதற்கு எதிராக குற்றவியல் சட்டத்தின் 106 ( 3) ஆம் அத்தியாயத்துக்கு அமைய  தடை உத்தரவு பிறப்பிக்குமாறும் கறுவாத்தோட்டம் பொலிஸார், சத்தியக் கடதாசி ஒன்றினையும் இணைத்து கோரிக்கை முன் வைத்திருந்தனர்.  அதனையே நீதிவான் நிராகரித்தார்.

அத்தோடு இன்று ( 8) ஆசிரியர் சங்கத்தினர் இணைந்து கொழும்பு நகர மண்டப பகுதியில் நடாத்திய, அடக்குமுறைக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தினையும் தடை செய்யுமாறு கறுவாத்தோட்டம் பொலிஸார் கோரியிருந்த போதும் அதனையும் நீதிமன்றம் நிராகரித்திருந்தது

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58