இலங்கையின் பெண்களுக்கு சுகாதாரசேவை உதவிகளை வழங்க 10.7 மில்லியன் டொலர்களை கோருகிறது ஐ.நா. சனத்தொகை நிதியம்

Published By: Vishnu

08 Aug, 2022 | 09:18 PM
image

(நா.தனுஜா)

இலங்கையில் வாழும் 2 மில்லியனுக்கும் அதிகமான பெண்கள் மற்றும் யுவதிகளுக்கு அடுத்த 6 மாதகாலத்திற்கு அவசியமான உயிர்காக்கும் சுகாதாரசேவையைப் பெற்றுக்கொடுப்பதற்காக 10.7 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியை நன்கொடையாக வழங்குமாறு ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியத்தின் கிளை செயற்திட்டங்களுள் ஒன்றான ஐக்கிய நாடுகள் பாலின மற்றும் இனவிருத்தி சுகாதார நிதியம் கோரிக்கைவிடுத்துள்ளது.

சுதந்திரமடைந்ததன் பின்னர் தற்போது இலங்கை மிகமோசமான சமூக - பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கின்றது.

அத்தியாவசிய மருந்துப்பொருட்கள் மற்றும் மருத்துவ உபகரணங்கள், மின்விநியோகத்தடை ஆகியவற்றின் விளைவாக நாட்டின் சுகாதாரக்கட்டமைப்பும் சுகாதாரசேவை வழங்கலும் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

இது பெண்களின் கர்ப்பகால நலன் உள்ளடங்கலாக பாலின மற்றும் கர்ப்பிணிப்பெண்களுக்கான சேவை வழங்கலில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்று சுட்டிக்காட்டியிருக்கும் ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியம், தற்போதைய பொருளாதார நெருக்கடியானது பெண்களின் சுகாதாரம், உரிமைகள் மற்றும் கௌவரம் ஆகியவற்றில் மிகையான பாதிப்புக்களைத் தோற்றுவித்திருப்பதாகவும் தெரித்திருக்கின்றது. 

எனவே தற்போதைய சூழ்நிலையில் பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் யுவதிகளின் அத்தியாவசிய தேவைகளைப் பூர்த்திசெய்வதும் அவர்களுக்கு சுகாதாரசேவை வழங்கல் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றின் கிடைப்பனவை உறுதிசெய்வதுமே தமது முன்னுரிமைக்குரிய விடயமாகக் காணப்படுவதாக ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் நட்டாலியா கனேம் குறிப்பிட்டுள்ளார்.

 அதன்படி தற்போது விடுக்கப்பட்டிருக்கும் 10.7 மில்லியன் அமெரிக்க டொலர் நன்கொடை கோரிக்கையின் ஊடாக 1.2 மில்லியன் பேருக்கு அவசியமான உயிர்காக்கும் மருந்துப்பொருட்கள் மற்றும் மருத்துவ உபகரணங்களை வழங்குவதற்கும், பெண்கள் மற்றும் யுவதிகளுக்குத் தேவையான 10,000 கர்ப்பகால உடைகளை வழங்குவதற்கும், அவசியமான சுகாதாரவசதிகளைப் பெறுவதற்கென 37,000 பெண்களுக்கு காசோலைகளை வழங்குவதற்கும், 4000 பெண்களுக்குத் தேவையான மாதவிடாய் சுகாதார வசதிகளை ஏற்படுத்திக்கொடுப்பதற்கும் எதிர்பார்க்கப்படுகின்றது. 

அதுமாத்திரமன்றி பாதிப்புக்களை எதிர்கொண்டிருக்கும் பெண்கள் மற்றும் யுவதிகளுக்கு உளவியல் ரீதியான ஆலோசனைகளை வழங்குவதற்கும் அவசியமான தகவல்கள் மற்றும் அறிவூட்டல் கருத்தரங்குகளை நடாத்துவதற்கும் அவர்களுக்குரிய சுகாதாரசேவை வழங்கலின் இயலுமையை அதிகரிப்பதற்கும் எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01