கருப்பு பணத்திற்கு வந்த சோதனை ; மோடியின் அதிரடி அறிவிப்பு

Published By: Raam

08 Nov, 2016 | 09:37 PM
image

இந்தியாவில் இன்று நள்ளிரவு முதல் இந்திய ரூபாய்க்கள் 500 மற்றும் 1000 நாணயத்தாள்கள் செல்லுப்படியாகாது என்று பிரதமர் மோடி திடீரென அறிவித்துள்ளார். 

இந்திய நாட்டு மக்களுக்கு பிரதமர் ஆற்றிய சிறப்பு தொலைக்காட்சி உரையில் அவர் இந்த திடீர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 

மேலும், ''நாடு முழுதும் நவம்பர் 9 மற்றும் 10 முதல் ஏ.டி.எம்.கள் செயல்படாது என்றும் பிரதமர் அறிவித்துள்ளார். டிசம்பர் 30 ஆம் திகதிக்குள் வங்கிகள் மற்றும் தபால் அலுவலகங்களில் ரூ.500, ரூ.1000 நோட்டுகளை ஒப்படைத்து மாற்றிக் கொள்ளலாம். ஒப்படைக்க அடையாள அட்டை அவசியம்'' என்றும் பிரதமர் அறிவித்துள்ளார்.

இந்தியாவில் உள்ள கருப்பு பணத்தை ஒழிப்பதற்கான குறித்த அறிவிப்பினை அதிரடியாக பிரதமர் மோடி இன்று வெளியிட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பாக பிரதமர் வெளியிட்டுள்ள அறிவிப்புகள் 

* ரூ.500, ரூ.1000 நோட்டுகளை டிசம்பர் 30-ம் திகதிக்குள் வங்கிகளிலும், தபால் நிலையங்களிலும் பரிமாற்றம் செய்து கொள்ளலாம். இதற்கு உரிய அடையாள அட்டை காண்பிக்க வேண்டும், உதாரணமாக வங்கி அட்டை, வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றை காண்பித்து பணமாற்றம் செய்து கொள்ளலாம்.

* டிசம்பர் 30-ம் திகதிக்குள் பணத்தை மாற்ற முடியாதவர்கள் மத்திய ரிசர்வ் வங்கியில் சான்றுதல் ஒன்றை அளித்து மாற்றிக் கொள்ளலாம். இந்த வசதி மார்ச் 31, 2017 வரை உள்ளது. இதற்கும் அடையாள அட்டை அவசியம் என்று தெரிவித்துள்ளார்.

* நாடு முழுதும் ஏடி.எம்.கள் நவம்பர் 9 மற்றும் 10ம் திகதிகளில் செயல்படாது. 

* எரிப்பொருள் நிரப்பு நிலையங்கள், அரசு வைத்தியசாலைகள், சர்வதேச விமான நிலையங்கள், புகையிரத டிக்கெட்டுகள் ஆகியவற்றிற்காக ரூ.500, ரூ.1000 நாணயங்களை நவம்பர் 11 ஆம் திகதி வரை பயன்படுத்தலாம்.

* சில நாட்களுக்கு ஏடிம் இலிருந்து ரூ.2000 மட்டுமே எடுக்க அனுமதி. இது பிற்பாடு ரூ.4,000 ஆக அதிகரிக்கப்படும்.வங்கி ஏடிஎம்-களிலிருந்து நாளொன்றுக்கு ரூ.10,000 வரை எடுக்க அனுமதி உண்டு, வாரத்திற்கு ரூ.20,000 வரை மட்டுமே வங்கி ஏடிஎம்களிலிருந்து பணம் எடுக்க முடியும்.

* இணைய வங்கி, பணம், டிடி நடவடிக்கைகளில் எந்தவித கட்டுப்பாடுகளும் இல்லை. 

* நாளை  வங்கிகள் செயல்படாது.

*புதிய 500 மற்றும் 2000  ரூபாய் நாணயங்கள்  புழக்கத்திற்கு வரும்.

*நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் கருப்புப் பணம், ஊழல் ஆகியவற்றிற்கு எதிராக போராட இது ஒரு வாய்ப்பு. இதுவரை பல்வேறு வழிமுறைகளில் ஊழல்வாதிகளிடமிருந்து ரூ.1,25,000 கோடி கருப்புப் பணத்தை மீட்டுள்ளோம்” பிரதமர் மோடி தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17