மூலப்பொருட்களின் விலை குறைக்கப்படுமாக இருந்தால் பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலையினை குறைக்க முடியும் ; யாழ் மாவட்ட கூட்டுறவு வெதுப்பக உரிமையாளர் சங்கத் தலைவர்

Published By: Digital Desk 3

06 Aug, 2022 | 03:57 PM
image

(எம்.நியூட்டன்)

வெதுப்பக உற்பத்தி பொருட்களின் மூலப்பொருட்களின் விலை குறைக்கப்படுமாக இருந்தால் பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலை யினை குறைக்க முடியும் என யாழ் மாவட்ட கூட்டுறவு வெதுப்பக உரிமையாளர் சங்கத் தலைவர்,கந்தசாமி குணரட்ணம் தெரிவித்தார்.

வெதுப்பக  உற்பத்தி பொருட்களின் தற்போதைய நிலைமை தொடர்பில் கருத்து தெரிவிக்கையில்  இதனை  தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில். 

வெதுப்பாக உற்பத்தி பொருட்களின் விலையினை நாங்களாக  அதிகரிக்கவில்லை மூலப்பொருட்களின் விலை உயர்வின் காரணமாகவும் எரிபொருள் தட்டுப்பாட்டின் காரணமாகவோமே வெதுப்பக உற்பத்தி பொருட்களின் விலையினை அதிகரிக்க நேரிட்டது. 

தற்போது கூட மூலப் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டு எரிபொருள் சீராக கிடைக்கப்பெறுமாக இருந்தால் எமது பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலையினை குறைப்பதற்கு  தயாராக இருக்கின்றோம்  அதற்கு தடையாக இருக்க மாட்டோம். 

மேலும் தற்பொழுது வெதுப்பகங்களுக்கு எரிபொருளினை பெறுவதற்கு யாழ்ப்பாண பிரதேச செயலரினால் ஒரு திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு நல்லூர் பிரதேச செயலகத்தினாலும் அது நடைமுறைப்படுத்தப்படுகின்றது. அதாவது ஒரு வெதுப்பாகத்திற்கு ஒரு எரிபொருள் நிரப்பு நிலையம் என்ற திட்டத்தின் அடிப்படையில் ஒரு திட்டம் யாழ்ப்பாண பிரதேச செயலாளர் சா.சுதர்சனால் யாழ்ப்பாண  பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நடைமுறைப்படுத்தப்பட்டு நல்லூர் பிரதேச செயலர் பிரிவிலும் அது நடைமுறைப்படுத்தப்படுகின்றது.

எனவே அந்த திட்டத்தினை ஏனைய மாவட்டங்களிலும் அல்லது நாடு முழுவதிலும் அந்த திட்டத்தினை நடைமுறைப்படுத்துமிடத்து வெதுபகங்ளுக்குரிய எரிபொருளினை இலகுவாக வெதுப்பக உரிமையாளர்கள் பெறக்கூடிய நிலை ஏற்படும் அவ்வாறான நிலை ஏற்படும் போது மக்களுக்கான  சேவையினைதடையின்றி முன்னெடுக்க முடியும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொவிட் ஆலோசனைகள் குறித்து வைத்தியர் சத்தியமூர்த்தியின்...

2024-04-16 11:19:30
news-image

அதிவேக நெடுஞ்சாலைகளின் 5 நாட்களின் வருமானம்...

2024-04-16 11:20:58
news-image

மீனவர்கள் பிரச்சினைகள் தொடர்பில் இந்திய மத்திய...

2024-04-16 11:15:15
news-image

இலங்கையிலிருந்து இஸ்ரேலுக்கான விமான சேவைகள் மீண்டும்...

2024-04-16 11:14:10
news-image

இலங்கையின் தென் கடற்பரப்பில் சிக்கிய 380...

2024-04-16 11:03:37
news-image

தமிழர்களை பயங்கரவாதிகளென அடையாளப்படுத்தி முன்னெடுக்கும் அரசியல்...

2024-04-16 10:56:51
news-image

மடாட்டுகமவில் யானை தாக்குதலுக்கு இலக்காகி 62...

2024-04-16 11:04:45
news-image

புத்தாண்டு காலத்தை இலக்காகக் கொண்டு நாடளாவிய...

2024-04-16 10:57:11
news-image

பாதாள உலகக் குழுத் தலைவரான “கணேமுல்ல...

2024-04-16 10:23:04
news-image

தனியாருடன் இணைந்த சேவையை வழங்க முடியாது...

2024-04-16 10:14:41
news-image

இன்று பல அலுவலக ரயில் சேவைகள்...

2024-04-16 10:07:27
news-image

மரதன் ஓட்டப் போட்டியில் மகனுக்கு ஆதரவளிக்கச்...

2024-04-16 10:26:53