இந்திய குடியரசு துணைத் தலைவர் தேர்தல் இன்று நடைபெறுகிறது : உறுப்பினர்கள் வாக்களிக்க மக்களவையில் விரிவான ஏற்பாடு

Published By: Digital Desk 5

06 Aug, 2022 | 07:21 PM
image

14ஆவது இந்திய குடியரசு துணைத் தலைவருக்கான தேர்தல் புது தில்லியில் உள்ள மக்களவை வளாகத்தில் இன்று நடைபெறுகிறது. இதில் மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் வாக்களிக்கிறார்கள்.

தற்போது குடியரசு துணைத் தலைவராக பணியாற்றி வரும் வெங்கைய நாயுடு அவர்களின் பதவிக்காலம் ஓகஸ்ட் 10ஆம் திகதியுடன் நிறைவடைகிறது. இதனைத் தொடர்ந்து அடுத்த குடியரசு துணைத் தலைவரை தெரிவு செய்வதற்கான தேர்தல் இன்று நடைபெறுகிறது.

இதில் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளராக மேற்குவங்க ஆளுநரான ஜெகதீப் தன்கர் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி கட்சியின் சார்பில் முன்னாள் ஆளுநரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான மார்க்கெட் ஆல்வா போட்டியிடுகிறார்.

மொத்தம் 788 உறுப்பினர்களை உள்ளடக்கிய இந்த தேர்தலில் ஒவ்வொரு உறுப்பினர்களின் வாக்கு மதிப்பு ஒன்றுதான். ரகசிய வாக்கெடுப்பு முறையில் நடைபெறும் இந்த தேர்தல், இன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. அதன் பிறகு பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வெற்றி பெற்றவரின் பெயர் அறிவிக்கப்படும்.

குடியரசு துணைத் தலைவர் பதவிக்கு பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் ஜெகதீப் தன்கருக்கு 500க்கும் மேற்பட்ட உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதால் அவர் வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவருக்கு தேசிய ஜனநாயக கூட்டணியின் கட்சியை சாராத ஐக்கிய ஜனதா தளம், ஒய் எஸ் ஆர் காங்கிரஸ், அதிமுக உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவிக்கிறது.

காங்கிரஸ் கட்சி மற்றும் அதன் கூட்டணி கட்சி சார்பில் போட்டியிடும் மார்க்கெட் ஆல்வாவிற்கு காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், திமுக உள்ளிட்ட 17 எதிர்க்கட்சிகளின் ஆதரவும், ஆம் ஆத்மி, ஜார்க்கண்ட் முக்தி மோர்சா, தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி ஆகிய கட்சிகளின் ஆதரவும் கிடைத்திருக்கிறது. இதன் காரணமாக இவர் 200க்கும் மேற்பட்ட வாக்குகள் பெறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே 23 உறுப்பினர்களை கொண்டிருக்கும் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் புறக்கணிக்கப் போவதாக அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இன்று மாலை 5 மணிக்கு பிறகு இந்திய குடியரசு துணைத் தலைவர் யார்? என்பது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாடாளுமன்ற வளாகத்தில் உறுப்பினர்கள் வாக்களிக்க தேர்தல் ஆணையம் விரிவான ஏற்பாடுகளை செய்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17