வீழ்ச்சியின் விளிம்பில் எகிப்தின் பொருளாதாரம்

Published By: Digital Desk 5

06 Aug, 2022 | 07:20 PM
image

லத்தீப் பாரூக்

பல தசாப்தங்களாக அடக்குமுறையாளர்களின் ஆட்சியின் பிடியில் சிக்கியுள்ள எகிப்து சுமார் 7500வருடங்களுக்கு மேற்பட்ட வரலாறையும் நாகரீகத்தையும் கொண்ட  தேசமாகும். வரலாற்றுக் காலம் முதலே அதன் மக்கள் தொகையில் ஆகக் கூடுதலானவர்கள் எழுத்தறிவு உள்ளவர்களாகவும் காணப்பட்டனர். ஆனால் தற்போது அதன் பொருளாதாரம் வீழ்ச்சியின் விளிம்புக்கு வந்துள்ளது. 

உடனடியான மாற்று நிவாரண நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால் 105மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் தொகையைக் கொண்ட இந்த நாட்டில் குழப்பநிலை ஏற்படுவது தவிர்க்க முடியாதவொன்றாகிவிடும். எகிப்து கடந்த பல ஆண்டுகளாகவே பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுத்து வருகின்றது. மித மிஞ்சிய ஊழலும், தவறான பொருளாதார முகாமைத்துவமும் இதற்கு முக்கிய காரணங்களாகும். 

சவூதி அரேபிய சர்வாதிகார ஆட்சியாளர்களின் பூரண ஆதரவுடன் அமெரிக்க, ஐரோப்பிய மற்றும் இஸ்ரேலின் கொடூரமான அடக்குமுறைக்கு அந்த நாடு முகம் கொடுக்க நேர்ந்ததும் தற்போதைய நிலைக்கு மற்றுமொரு முக்கியமான காரணமாகும். அத்துடன் எகிப்து பிரதான உணவுக்காக  கோதுமையை இறக்குமதி செய்வதால் உக்ரேன், ரஷ்ய போரும் பெருந்தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது. 

எகிப்தின் சர்வாதிகார ஆட்சியாளர் அப்துல் பத்தாஹ் அல் சிசியின் இயலாமை மற்றும் அலட்சியம் காரணமாகவும் அவரின் சர்வதேச ஆதரவாளர்களின் குறுகிய நோக்கங்கள் காரணமாகவும் எகிப்தின் பொருளாதாரம் பாரிய அழிவை சந்திக்கிறது. அப்துல் பத்தாஹ் அல் சிசி சர்வதேச நாணய நிதியத்துடன் சேர்ந்து எகிப்தை ஒரு முதலீட்டு மையமாக விற்று விட்டார். சர்வதேச நாணய நிதியத்தின் உதவிகள் மூலம் வசதி படைத்தவர்கள் தமது பைகளை நிறப்பிக் கொண்டனர் ஆனால் சாதாரண அப்பாவி மக்கள் வாழ வழியின்றி தமது வாழ்வாதாரங்களை இழந்து அன்றாடம் தவிக்கின்றனர்.

எகிப்து திவாலான அல்லது வங்குரோத்தான ஒரு நாடாக மாறுவதற்கு இன்னும் சில மாதங்களே உள்ளன. தற்போதுள்ள 30சதவீத வறுமை விரைவில் பன்மடங்கு பெருகி பட்டினி ஏற்படக்கூடும். எகிப்தின் எதிர்க்கட்சிகள் செய்வதறியாது தவிக்கின்றன.

நாணய நிதியத்தின் பணிப்பாளர் சபைக்கு பல கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன. அதிகரித்துக் காணப்படும் கடன் சுமை, வழங்கப்பட்ட நிதிகள் அரச தரப்பால் திட்டங்கள் என்ற பெயரில் முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டமை என்பன பற்றி அவற்றில் குறிப்பிடப்பட்டுள்ளன. அமெரிக்க மற்றும் ஐரோப்பிய தலைவர்கள் எகிப்தின் பொருளாதாரம் எதிர்நோக்கி உள்ள யதார்த்த நிலை, அதனால் ஏற்படக் கூடிய சமூக அமைதியின்மை, வன்முறைகள் மற்றும் சட்டவிரோத குடிப்பெயர்வு என்பன பற்றி எச்சரிக்கைகளையும் அனுப்பி உள்ளனர். 

நீதித்துறையின் முழுமையான கட்டுப்பாட்டையும் ஆட்சியாளர்கள் கொண்டிருந்ததன் விளைவாக அதிருப்தியாளர்களின் குரல்களை ஒழுங்குமுறையின் கீழ் அடக்கியாழ முடிந்தது. இதனால் 60000த்துக்கும் அதிகமான அரசியல் கைதிகள் சட்டத்துக்குப் புறம்பாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். தனது நாட்டை சுரண்டுவதந்கு தேவையான எல்லா ஆதரவும் சிசியின் வெளிநாட்டு ஆதரவாளர்களால் வழங்கப்பட்டு வருகின்றது.

எகிப்தில் தொடங்கிய மிகப் பெரிய திட்டமான எத்தியோப்பிய மறுமலர்ச்சி அணை பூர்த்தி செய்யப்படும் போது தான் மிக மோசமான விளைவுகளை சந்திக்க உள்ளது. 2015இல் எகிப்து நைல் நதி மீதான அதன் வரலாற்று ரீதியான உரிமையை விட்டுக் கொடுத்தது. இந்த நாசகார முடிவானது சுமார் 7000ஆண்டுகள் பழமையான சிவில் நாகரிகத்தின் கட்டமைப்பை அச்சுறுத்தலுக்கு ஆளாக்கி உள்ளது.

சிசி தன்னோடு சேர்த்து தனது நாட்டையும் அதள பாதாளத்துக்குள் தள்ளி உள்ளார். இதில் இருந்து அந்த நாடு எப்படி மீண்டு வரும் என்பது தான் கேள்வி. எகிப்துக்கு இப்போது தேவைப்படுவது அவசரமான ஒரு உயிர் காப்புத்திட்டம்.

மேற்குலகம் எப்போதுமே தனது நலன்களைப் பேணுவதற்காக ஏனைய நாடுகளின் சர்வாதிகாரிகளையே ஆதரித்து வந்துள்ளது. இஸ்லாத்துக்கும் முஸ்லிம்களுக்கும் எதிரான போராட்டத்தை சிசியின் ஆதரவாளர்கள் ஊக்குவித்து வருகின்றனர். இதனால் எகிப்தின் முக்கிய மதச்சார்பற்ற செயற்பாட்டாளர் அலா அப்த் அல் பத்தாஹ் சிறையில் மெல்ல மெல்ல மரணத்தை தழுவ விடப்பட்டபோதும் அவர்கள் மௌனம் காத்தனர். 

 எத்தியோப்பிய அணைக்கட்டு விவகாரம் உயர்மட்ட அவசர பேச்சுவார்த்தைகளை வேண்டி நிற்கின்றது. இதற்கு அரசியல் சக்திகள் ஓரணியின் கீழ் கொண்டு வரப்பட வேண்டும். எகிப்தின் இருப்பே இப்போது அச்சுறுத்தலுக்கு ஆளாகி உள்ளது. இதிலிருந்து விடுபட புனிதமானதோர் அரசியல் கூட்டணி அவசியமாகின்றது.

நைல் நதி 

விவசாயம்.

அரசாங்கம் தற்போது வரவு, செலவுத் திட்டத்தில் 38சதவீத பங்கை ஏற்கனவே பெற்றுக் கொண்ட கடன்களை திருப்பிச் செலுத்த ஒதுக்குகின்றது. இவற்றோடு ஏனைய கடன்களையும் தவணைகளையும் சேர்க்கின்ற போது 58சதவீதம் வெற்றிடமாகி விடுகின்றது. இந்த நிலைமைகளை விளக்கி உள்ள முன்னர் தடுத்து வைக்கப்பட்டிருந்த ராமி சாத் என்பவர் எகிப்து ஒரு அச்சத்துக்குரிய குடியரசு என்று வர்ணித்துள்ளார்.

பத்தி எழுத்தாளர்கள், புத்திஜீவிகள், எதிர்க்கட்சித் தலைவர்கள் உட்பட எகிப்திய மக்களும், இன்னும் பலரும் ஒரேவிதமான கருத்தினையே கொண்டுள்ளனர். அதுதான் சர்வாதிகாரமும் அதற்கு அமெரிக்க, ஐரோப்பிய, இஸ்ரேல் மற்றும் சவூதியின் ஆதரவும் எகிப்தின் நலன்களுக்கு அப்பால் இஸ்ரேலின் நலன்களைப் பாதுகாக்க முனையும் இந்த சக்திகளின் போக்கும், நாட்டை சாபத்துக்கே இட்டுச் செல்லும் என்பதாகும்.

முன்னாள் சர்வதிகாரி ஹொஸ்னி முபாரக்கின் 30 வருடங்களுக்கு மேற்பட்ட அடக்குமுறை ஆட்சி, இஸ்ரேல் அதன் நிலைகளை ஸ்திரப்படுத்திக் கொள்ளவும், அரபிகளுடனான அதன் யுத்தங்களின் வெற்றியை நிலைநிறுத்திக் கொள்ளவும், அரபு மக்களை தொடர்ந்து கொடுமைகளுக்கு உற்படுத்தவும் தேவையான கால அவகாசத்தை வழங்கியது. இஸ்ரேலுடன் தனது சமாதானப் பேச்சுக்களைத் தொடர்ந்து முன்னெடுக்குமாறு முன்னாள் பலஸ்தீனத் தலைவர் யஸர் அரபாத்துக்கும் முபாரக் பெரும் நெருக்கடியை கொடுத்து வந்தார். ஆனால் இந்தப் பேச்சுவார்த்தைகள் பலஸ்தீனர்களுடன் எவ்வித சமாதானத்தையும் ஏற்படுத்தவில்லை என்பதே உண்மையாகும்.

2010-2011 அரபு வசன்த உதயத்தின்போது கொடுங்கோல் ஆட்சியாளர் முபாரக்கின் ஆட்சி வீழ்த்தப்பட்டது. அதன் தொடராக 60ஆண்டு காலப்பகுதியில் எகிப்தில் முதல் தடவையாக இடம்பெற்ற ஜனநாயக ரீதியான தேர்தலில் இஸ்லாமிய சகோதரத்துவ இயக்கத்தின் சார்பாக முஹம்மத் முர்ஷி மக்களால் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டார். 

ஆனால் இதனால் விழிப்படைந்த அமெரிக்கா, ஐரோப்பா, இஸ்ரேல், சவூதி, ஐக்கிய அரபு அமீரகம், குவைத் ஆகிய நாடுகள் அங்கே இஸ்லாம் துளிர் விடுவதையும் ஜனநாயம் மலர்வதையும் முளையிலேயே நசுக்கும் பணியை மேற்கொண்டன. 

இந்த ஆட்சி கவிழ்ப்பு நடவடிக்கைகளுக்காக எகிப்துக்குள் செயற்கையான உணவு, எரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருள்கள் மீதான பற்றாக்குறையை ஏற்படுத்த சவூதி, ஐக்கிய அரபு அமீரகம் குவைத் என்பன இணைந்து 11பில்லியன் அமெரிக்க டொலர்களை செலவிட்டுள்ளன.

ஒரு இராணுவ ஜெனரலான சிசியின் பதவியில் அமர்த்தப்படார். அன்று முதல் அவரை விமர்சித்த பலர் ஈவிரக்கமின்றி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். பலர் சித்திரவதைகளுக்கு உள்ளாகி உள்ளனர் பலர் பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். இன்னும் பலர் அடக்குமுறையால் புலம்பெயர்ந்தும் உள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அக்குராணை கிராமமும் பொது மக்கள் எதிர்கொள்ளும்...

2024-03-29 17:17:02
news-image

பிரித்தானிய மக்களை கண்ணீர் சிந்தவைத்த இளவரசி...

2024-03-29 13:17:06
news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48