நாட்டை ஆட்சி செய்வது ரணிலா ? ராஜபக்ஷக்களா ? - எதிர்க்கட்சி கேள்வி

Published By: Vishnu

05 Aug, 2022 | 08:22 PM
image

(எம்.மனோசித்ரா)

மனித உரிமைகள் மீறல்களிலும், ஜனநாயக விரோத செயற்பாடுகளிலும் ஈடுபட்டு அரசாங்கம் சர்வதேசத்தின் ஒத்துழைப்புக்களை இழப்பதற்கு தயாராகிக் கொண்டிருக்கிறது.

உண்மையில் தற்போது நாட்டை ஆட்சி செய்வது ரணில் விக்கிரமசிங்கவா அல்லது ராஜபக்ஷக்களா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் 05 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் ஆற்றிய கொள்கை பிரகடன உரைக்கு முரணாகவே செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்.

அவர் ராஜபக்ஷாக்களின் கட்டளைகளையே நிறைவேற்றிக் கொண்டிருக்கின்றார். பாராளுமன்ற உறுப்பினராக இருந்த போது ஜோசப் ஸ்டாலின் கைது செய்யப்பட்டால் அது ஜி.எஸ்.பி.பிளஸ் வரி சலுகையைப் பாதிக்கும் எனக் கூறியவர் , இன்று அது குறித்து எதனையும் தெரிவிக்கவில்லை.

சர்வதேச மனித உரிமைகள் அமைப்புக்கள் இதற்கு எதிர்ப்பினை வெளியிட்டுள்ளன. இவ்வாறான செயற்பாடுகள் மூலம் அரசாங்கம் சர்வதேசத்தினை ஒத்துழைப்புக்களை இழப்பதற்கு தயாராகிக் கொண்டிருக்கின்றதா? சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி உள்ளிட்டவை வெறுமனே எமக்கு உதவ முன்வரப் போவதில்லை. நாட்டில் ஜனநாயகமும் , மனித உரிமைகளும் மதிக்கப்பட பாதுகாப்பட வேண்டும்.

மனித உரிமைகளை மீறும் வகையிலான செயற்பாடுகளை முன்னெடுத்து , சர்வதேசத்தின் ஒத்துழைப்புக்களை எதிர்பார்க்க முடியாது. உண்மையில் தற்போது அரசாங்கத்தை நிர்வகிப்பது யார் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

ஜனநாயகத்தை உறுதிப்படுத்தாமல் சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்க முடியாது. மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் அமைக்கப்படும் சர்வகட்சி அரசாங்கம் ஜனநாயகமானதாக அமையாது.

கொள்கை பிரகடன உரையில் தெரிவித்த விடயங்களை பாராளுமன்றத்தின் 4 சுவர்களுக்குள் மாத்திரம் வரையறுக்காமல் , அவற்றை நடைமுறையில் செயற்படுத்துவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்தோடு அடக்குமுறைகள் ஊடாக மக்களை முடக்கும் சர்வாதிகார ஆட்சியையும் அரசாங்கம் கைவிட வேண்டும் என்றார்.

--

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58