(ஜவ்பர்கான்)

மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டது. இதனால் வாத்தக நிலையங்கள், வங்கிகள், பாடசாலைகள், பொதுச்சந்தைகள் உட்பட அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன எனவும் வீதிகளில் மக்களின் மக்கள் நடமாட்டமின்றி காணப்பட்டன எனவும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.


மேலும், பாதுகாப்பு கடமைகளில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படவேண்டுமென்பதை வலியுறுத்தியே தமிழ் தேசிய கூட்டமைப்பு இந்த ஹர்த்தாலை ஏற்பாடு செய்துள்ளதாக கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பி.அரியநேத்திரன் தெரிவித்தார்.