லண்டன் மிருகக் காட்­சி­சா­லையில் காட்­சிப்­ப­டுத்­தப்­பட்­டுள்ள கைப்பை

Published By: Vishnu

05 Aug, 2022 | 12:39 PM
image

மிருகக் காட்­சி­சா­லை­களில் பொது­வாக உயி­ரி­னங்கள் தான் காட்­சிப்­ப­டுத்­தப்­படும். ஆனால், லண்டன் மிருகக் காட்­சி­சா­லையில் கைப்பை ஒன்று காட்­சிக்கு வைக்­கப்­பட்­டுள்­ளமை பல­ருக்கும் வியப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

முத­லையின் தோலினால் செய்­யப்­பட்ட கைப்பை ஒன்று அங்கு காட்­சிப்­ப­டுத்­தப்­பட்­டுள்ளது. 

தென்­கி­ழக்­கா­சிய பிராந்­தி­யத்தின் சியாமிஸ் முதலை இனத்தைச் சேர்ந்த முத­லையின் தோலினால் இக்­கைப்பை தயா­ரிக்­கப்­பட்­டுள்­ளது.

2018 ஆம் ஆண்டு லண்டன் விமான நிலை­யத்தில் வைத்து பிரித்­தா­னிய எல்லைப் பாது­காப்பு அதி­கா­ரி­க­ளினால் இக்­கைப்பை கைப்­பற்­றப்­பட்­டது.

உல­க­ளா­விய ரீதியில் சட்­ட­வி­ரோத வன­வி­லங்கு வியா­பா­ரத்­தினால் ஏற்­ப­டுத்தும் தாக்­கங்­களை  வெளிப்­ப­டுத்­து­வ­தற்­காக, லண்டன் மிருகக் காட்­சி­சா­லை­யிடம் அக்­கைப்­பையை அதி­கா­ரிகள் வழங்­கினர். அதன்பின் அங்கு இக்­கைப்­பையும் காட்­சிக்கு வைக்­கப்­பட்­டுள்­ளது.

பல வரு­டங்­க­ளாக இக்­கைப்பை அங்கு காட்­சிப்­ப­டுத்­தப்­பட்­டுள்ள போதிலும் அண்­மையில் இது தொடர்­பாக டுவிட்­டரில் புகைப்­ப­ட­மொன்று வெளி­யா­ன­தை­ய­டுத்து இவ்­வி­டயம் பலரின் கவ­னத்தை ஈர்த்­துள்­ளது.

மேற்­படி மிருகக் காட்­சி­சா­லையில் உயி­ருள்ள சியாமிஸ் முத­லைகள் இல்லை என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

வேட்­டை­யா­டப்­ப­டு­வதன் கார­ண­மாக, உலகில் இந்த முத­லை­யினம் அருகி வரு­வ­தா­கவும், தற்­போது உலகில் சுமார் 500 – 1000 எண்­ணிக்­கை­யி­லான இந்த ரக முத­லை­களே உள்­ள­தா­கவும் மதிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

லண்டன் மிருகக் காட்­சி­சா­லையைச் சேர்ந்த, நக­ரு­யிர்கள் தொடர்­பான நிபுணர் கலா­நிதி பென் டெப்லே. இது தொடர்­பாக கூறு­கையில், “அற்­பு­த­மான மிரு­கங்­களை இங்கு வைத்­தி­ருப்­பது சிறப்­பா­னது. ஆனால், இக்­கைப்பை பலரின் கண்­களை ஈர்த்துள்­ளது. இங்கு வருபவர்களுக்கு இது குறித்து அறிவூட்டவும் அதை பேசுபொருளாக்கவும் நாம் விரும்பினோம். இந்த சட்டவிரோத வர்த்தகத்தை வெளிச்சத்துக்கு கொண்டுவரும் எதுவும் சிறந்தது தான்” எனத் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right