சீரற்ற காலநிலையால் 12 829 பேர் பாதிப்பு

Published By: Digital Desk 4

04 Aug, 2022 | 07:31 PM
image

(எம்.மனோசித்ரா)

நாட்டில் நிலவும் சீரற்ற கால நிலை காரணமாக 10 மாவட்டங்களைச் சேர்ந்த 3000 இற்கும் அதிக குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம், நுவரெலியா, கண்டி, மாத்தளை, காலி, அம்பாந்தோட்டை, மாத்தறை, இரத்தினபுரி, கேகாலை மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களே சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ளன.

சீரற்ற காலநிலையால் 11 000 பேர் பாதிப்பு - மூவர் பலி : நால்வர் மாயம் - 9  மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை | Virakesari.lk

இம்மாவட்டங்களில் 3194 குடும்பங்களைச் சேர்ந்த 12 829 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவற்றில் 985 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. இதே வேளை 480 குடும்பங்களைச் சேர்ந்த 2313 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

நிலவும் தென் மேற்கு பருவ பெயர்ச்சி காலநிலை காரணமாக மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் , காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடை மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும். அத்தோடு கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் 100 மில்லி மீற்றருக்கும் அதிக மழை வீழ்ச்சி பதிவாகக் கூடும் என்று இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நியூசிலாந்தின் வெலிங்டனில் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தை நிறுவ...

2024-04-20 10:36:43
news-image

இராணுவ வீரர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு !

2024-04-20 10:31:22
news-image

செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமையின் அயற்கிராமங்கள்...

2024-04-20 10:26:06
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள்...

2024-04-20 10:34:03
news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12