கல்கிசை நீதிமன்ற வளாகத் துப்பாக்கிச் சூடு - மேலும் சில தகவல்களை வெளியிட்டுள்ள சட்டத்தரணிகள் சங்க செயலாளர் 

Published By: Digital Desk 4

04 Aug, 2022 | 06:00 PM
image

கல்கிசை நீதிமன்ற வளாகத்தில் இன்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பான மேலும் சில தகவல்கள் வெளியாகியுள்ளன.

அந்த வகையில், கல்கிசை சட்டத்தரணிகள் சங்கத்தின் செயலாளர் சட்டத்தரணி சீத்மா பெர்னாண்டோ, வழக்கு ஒன்றிற்காக ஆஜராகியிருந்த சாட்சி ஒருவரை இலக்கு வைத்தே குறித்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக தெரிவித்தார்.

நீதிமன்ற அறைக்குள் இருந்த மக்கள் குழுவில் சந்தேக நபர் இருந்ததாகவும், சாட்சி பெட்டியை நெருங்கி சாட்சியை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாகவும் அவர் கூறினார்.

எவ்வாறாயினும், சந்தேக நபரால் குறித்த சாட்சி நபரை காயப்படுத்த முடியாததால் நீதிமன்ற அறையை விட்டு வெளியேறி, வளாகத்தை விட்டு வெளியேறுவதற்கு முன்னர் அச்சுறுத்தும் சைகையாக வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாக தெரிவித்த அவர் குறித்த துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து நீதிமன்ற வழக்கு சிறிது நேரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டதாக சட்டத்தரணி சீத்மா பெர்னாண்டோ மேலும் தெரிவித்தார்.

இந்நிலையில் குறித்த சாட்சி நபருக்கு ஏதேனும் குற்றச் செயல்களுடன் தொடர்பு உள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02
news-image

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கோழி இறைச்சி...

2024-04-18 17:43:51
news-image

மாளிகாகந்த நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக...

2024-04-18 17:24:50
news-image

திருகோணமலை வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டிகள்...

2024-04-18 17:13:38
news-image

வரலாற்றில் இன்று : 1956 ஏப்ரல்...

2024-04-18 17:01:15
news-image

கோட்டா என்னை ஏமாற்றினார் - மல்கம்...

2024-04-18 16:58:51
news-image

திரியாய் தமிழ் மகாவித்தியாலயத்தின் குடிநீர்ப் பிரச்சினைக்கு...

2024-04-18 16:51:36