சீனா புதிய போர் ஒத்திகையை ஆரம்பித்தது-; போரை நாடாமல் போருக்கு தயாராவதாக தாய்வான் அறிவிப்பு

Published By: Rajeeban

04 Aug, 2022 | 12:59 PM
image

தாய்வான் போரை நாடாமல் போருக்கு தயாராவதாக தெரிவித்துள்ளது.

வியாழக்கிழமை தாய்வான் கரையோரத்தில் சீனா முன்னொருபோதும் இல்லாத நான்குநாள் போர் ஒத்திகையை ஆரம்பித்துள்ள நிலையிலேயே தாய்வான் இதனை அறிவித்துள்ளது. live-fire exercises

நான்சி பெலோசியின் தாய்வான் விஜயத்தை தொடர்ந்தே  சீனா இராணுவ ஒத்திகையை ஆரம்பித்துள்ளது.

முக்கியமான இராணுவ ஒத்திகை ஆரம்பிக்கப்பட்டுள்ளது என சீனாவின் அரச ஊடகமான சிசிடிவிஅறிவித்துள்ளது.

இந்த ஒத்திகையில் சீனா ஏவுகணைகளை பயன்படுத்தலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த உண்மையான மோதல் ஒத்திகையில் தீவை சுற்றியுள்ள ஆறு இடங்கள் தெரிவு செய்யப்பட்டன இந்த காலப்பகுதியில் குறிப்பிட்ட கடல் வான்பரப்பிற்குள் அனைத்து கப்பல்களும் விமானங்களும் நுழைய முடியாது என சீன ஊடகம் தெரிவித்துள்ளது.

தாய்வானை சுற்றிவளைத்து ஆறு இடங்களில் ஒத்திகை இடம்பெறவுள்ளதுடன் இந்த பகுதிகளிற்குள் கப்பல்கள் விமானங்கள் நுழைவது தடைசெய்யப்பட்டுள்ளதாக அறிவித்தல் வெளியாகியுள்ளது.

இந்த பகுதிகளில் சில தாய்வானின் கடற்பகுதிக்குள் வருகின்றன,முக்கிய துறைமுகங்களிற்கு அருகில் காணப்படுகின்றன.

சீனா முற்றுகையொன்றில் ஈடுபட்டுள்ளது என தாய்வானின் பாதுகாப்பு அமைச்சு குற்றம்சாட்டியுள்ளது.

தாய்வானிற்கு வரவுள்ள கப்பல்களையும் விமானங்களையும் மாற்றுபாதைகளை பயன்படுத்துமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

சீனா தனது ஒத்திகையை ஆரம்பித்து பத்து நிமிடங்களின் பின்னர் அறிக்கையொன்றை வெளியிட்ட தாய்வானின் பாதுகாப்பு அமைச்சு சீனா பகுத்தறிவற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றது சீனாவிற்கு தற்போதைய நிலையை மாற்றும் பிராந்திய அமைதி மற்றும்ஸ்திரதன்மையை குலைக்கும் நோக்கமுள்ளது என குற்றம்சாட்டியுள்ளது.

யுத்தத்தை நாடாமல் யுத்தத்திற்கு தயாராகும் நடவடிக்கைகளில் ஈடுபடப்போவதாக தாய்வானின் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47