சமையல் எரிவாயு தட்டுப்பாடு முழுமையாகக் குறைவடையும் - ஜனாதிபதி அலுவலகப் பிரதானி சாகல

Published By: Vishnu

04 Aug, 2022 | 12:56 PM
image

(எம்.மனோசித்ரா)

உலக வங்கியுடன் செய்து கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தம் மற்றும் லிட்ரோ நிறுவனத்தின் முயற்சியினால் எதிர்வரும் ஒக்டோபர் மாதத்திற்குள் ஒரு இலட்சம் மெட்ரிக் தொன் சமையல் எரிவாயுவை இறக்குமதி செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அதற்கமைய வெகுவிரைவில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு முழுமையாகக் குறைவடையும் என்று ஜனாதிபதி அலுவலகப் பிரதானி சாகல ரத்நாயக்க தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் ,

கடந்த ஜூன் 15 ஆம் திகதி முதித பீரிஸ் லிட்ரோ நிறுவனத் தலைவராக நியமிக்கப்பட்டதன் பின்னர் ஓமான் வர்த்தக நிறுவனத்துடன் மீண்டும் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டன.

அதன் பின்னர் எமது நிபந்தனைகளுக்கு அவர்களை இணக்கம் தெரிவிக்க வைத்ததன் பின்னர் , எரிவாறு இறக்குமதிக்கான டொலரைத் தேடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.

அதன் பின்னர் 20 நாட்களுக்குள் 33 000 தொன் எரிவாயுவை இறக்குமதி செய்வதற்கான பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டன.

நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன, மத்திய வங்கி ஆளுனர் கலாநிதி நந்தலால் வீரசிங்க உள்ளிட்டோரது ஒத்துழைப்புடன் டொலரை பெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

அத்தோடு உலக வங்கியுடனான பேச்சுவார்த்தைகளும் வெற்றிகரமாக நிறைவுக்குக் கொண்டு வரப்பட்டன. அதற்கமைய உலக வங்கியிடமிருந்து 70 மில்லியன் டொலர்களைப் பெற்றுக் கொள்வதற்கான ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

உலக வங்கியின் 70 மில்லியன் டொலர்களையும் , லிட்ரோ நிறுவனத்தின் 20 மில்லியன் டொலர்களையும் கொண்டு ஒக்டோபர் மாதம் வரை ஒரு இலட்சம் மெட்ரிக் தொன் எரிவாயுவை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய இதுவரையில் 30 000 தொன் எரிவாயு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் சமையல் எரிவாயுவிற்கான வரிசையைக் குறைக்கக் கூடியதாகவுள்ளது.

உலக வங்கியுடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தில் மேலும் சில நன்மைகளும் காணப்படுகின்றன. லிட்ரோ நிறுவனம் திறைசேரிக்கு 5 மாதங்களுக்கு கடனை செலுத்துகின்ற போதிலும் , திறைசேரியினால் உலக வங்கியின் கடனை செலுத்துவதற்கு 15 ஆண்டுகள் கால அவகாசம் காணப்படுகிறது. அதற்கமைய திறைசேரியில் மேலதிகமாக 22 மில்லியன் டொலர் இருப்பில் காணப்படும்.

ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைய லிட்ரோ நிறுவனத்தினால் விலை சூத்திரமொன்றும் அமுல்படுத்தப்பட்டுள்ளது. நாட்டில் எரிவாயு தட்டுப்பாடு முழுமையாக சீராக சில வாரங்கள்  செல்லக் கூடும். எவ்வாறிருப்பினும் வெகுவிரைவில் அந்த நெருக்கடிகள் முழுமையாக சரி செய்யப்படும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:25:16
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 12:31:10
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43
news-image

போதைப்பொருள் மாத்திரைகளை வைத்திருந்த இருவர் புல்மோட்டையில்...

2024-04-19 11:35:04
news-image

கொஸ்கமவில் லொறி கவிழ்ந்து விபத்து ;...

2024-04-19 11:17:01