அமெ­ரிக்க ஜனா­தி­பதி தேர்தல் இன்று ஆரம்பம்

Published By: MD.Lucias

08 Nov, 2016 | 10:23 AM
image

அமெ­ரிக்­காவின் 58ஆவது ஜனா­தி­பதி தேர்தல் இன்று செவ்­வாய்க்­கி­ழமை ஆரம்­ப­மா­கி­றது. இந்தத் தேர்­தலில் அமெ­ரிக்க  ஜன­நா­யகக் கட்­சியின் வேட்­பாளர் ஹிலாரி  கிளின்­ட­னுக்கும் குடி­ய­ரசுக் கட்­சியின் வேட்­பாளர் டொனால்ட் டிரம்­புக்­கு­மி­டையே கடும் போட்டி நில­வு­கி­றது.   

ஹிலாரி கிளின்டன் இரா­ஜாங்கச் செய­லா­ள­ராக கட­மை­யாற்­றிய போது தனது உத்­தி­யோ­க­பூர்வ தகவல் பரி­மாற்­றத்­துக்கு தனது தனிப்­பட்ட மின்­னஞ்சல் முக­வ­ரியைப் பயன்­ப­டுத்­தி­யது தொடர்­பான விசா­ரணை அண்­மையில் மீள ஆரம்­பிக்­கப்­பட்­டி­ருந்­தமை மேற்­படி தேர்­தலில் அவ­ருக்கு பாத­க­மான பெறு­பேற்றைத் தரலாம் என எதிர்­பார்க்­கப்­பட்ட நிலையில், அமெ­ரிக்கப் புல­னாய்வுப் பணி­மனை (எப்.பி.ஐ) தேர்தல் நடை­பெ­று­வ­தற்கு முன்­னரே அவரை அந்தக் குற்­றச்­சாட்­டி­லி­ருந்து விடு­வித்­துள்­ளது.

அந்தக் குற்­றச்­சாட்டு விசா­ரணை குறித்து அறி­விக்­கப்­பட்­ட­வுடன் ஹிலா­ரிக்­கான ஆத­ரவில் பெரும் சரிவு ஏற்­பட்­டி­ருந்த போதும் அவர் டொனால்ட் டிரம்பை விடவும் குறைந்த வாக்­குகள் வித்­தி­யா­சத்தில் முன் நிலையில் இருந்து வந்­தி­ருந்தார்.

இந்­நி­லையில் மேற்­படி மின்­னஞ்சல் தொடர்­பான குற்­றச்­சாட்­டு­க­ளி­லி­ருந்­து­அவர் தற்­போது விடு­விக்­கப்­பட்­டுள்­ளமை அவ­ருக்கு இந்தத் தேர்­தலில் பெரும் அனு­கூ­லத்தை அளிப்­ப­தாக உள்­ள­தாக கரு­தப்­ப­டு­கி­றது.

அதே­ச­மயம் கடும்­போக்கு அமெ­ரிக்­கர்கள் மத்­தியில் அபி­மானம் பெற்­ற­வ­ராக திகழும் டொனால்ட் டிரம்போ தனது சர்ச்­சைக்­கு­ரிய கருத்­து­க­ளாலும் பெண்கள் தொடர்­பான கீழ்த்­த­ர­மான விமர்­ச­னங்­க­ளாலும் சரா­சரி அமெ­ரிக்­கர்கள் மத்­தியில் அதி­ருப்­தியை ஏற்­ப­டுத்தும் ஒரு­வ­ரா­க­வுள்­ள­தாக விமர்­சிக்­கப்­ப­டு­கி­றது.

இந்­நி­லையில் இந்தத் தேர்­தலில் வாக்­க­ளிக்க சுமார் 219 மில்­லியன் அமெ­ரிக்­கர்கள் தகுதி பெற்­றுள்­ளனர்.

வாக்­கெ­டுப்­பு­க­ளா­னது மாநி­லங்­க­ளுக்­கி­டை­யி­லான நேர வித்­தி­யா­சத்தின் பிர­காரம் 6 நேர வல­யங்­களில் இடம்­பெ­று­கி­றது. தேர்தல் நடை­பெறும் நேரம் மாநி­லங்­க­ளுக்­கி­டையே வித்­தி­யா­சப்­ப­டினும் அநேக மாநி­லங்­களில் உள்ளூர் நேரப்­படி காலை 6:00 மணி­யி­லி­ருந்து இரவு 7:00 மணி வரை வாக்­க­ளிப்பு நடை­பெ­று­கி­றது.

இந்­நி­லையில் இன்று அமெ­ரிக்க வாக்­கா­ளர்கள் ஒவ்­வொரு மாநி­லத்­தி­லு­மி­ருந்து ஜனா­தி­ப­தியை தெரி­வு­செய்யும் வாக்­காளர் தொகுதி உறுப்­பி­னர்­களை தெரிவு செய்வர். தொடர்ந்து வாக்­காளர் தொகு­தி­யி­னூ­டாக புதிய ஜனா­தி­ப­தியும் உப ஜனா­தி­ப­தியும் தெரிவு செய்­யப்­ப­டுவர்.

முத­லா­வது தேர்தல் பெறு­பே­றுகள் கிழக்கு மாநி­லங்­க­ளி­லி­ருந்து வெளி­வரும்.

போட்டி வேட்­பா­ளர்கள் பெற்றுக் கொள்ளும் வாக்­காளர் தொகுதி வாக்­கு­களின் எண்­ணிக்­கையில் கணி­ச­மான வித்­தி­யாசம் இருக்கும் பட்­சத்தில் யார் தேர்­தலில் வெற்றி பெற்­றுள்ளார் என்­பதை தேர்­த­லுக்கு மறு­நா­ளான நாளை புதன்­கி­ழ­மையே கூறக்­கூ­டி­ய­தாக இருக்கும் எனத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

தேர்­த­லி­லான வெற்­றியை உறு­தி­செய்ய வேட்­பாளர் 538 தேர்தல் தொகு­தி­களில் 270 தேர்தல் தொகுதி வாக்­கு­களைப் பெற வேண்­டி­யுள்­ளது. தேர்­தலில் போட்­டி­யிடும் பிர­தான போட்­டி­யா­ளர்கள் இரு­வரும் 269 தேர்தல் தொகுதி வாக்­கு­களைப் பெற்­றி­ருப்பின் போட்டி இறுக்­க­மா­க­வி­ருக்கும். அத்­த­கைய சந்­தர்ப்­பங்­களில் தேர்தல் முடிவு தாம­த­மாகும். இதன்­போது ஒவ்­வொரு வாக்கும் தனித்­த­னியே எண்ணப்படும். அத்துடன் தேர்தல் செயற்கிரமங்கள் தொடர்பான சட்ட சவால்களும் தேர்தல் பெறுபேறுகளைத் தாமதப்படுத்தும்.

அமெரிக்கத் தேர்தல் முறைமையின் கீழ் தேர்தல் தொகுதி உறுப்பினர்களின் வாக்கெடுப்பு எதி்ர்வரும் டிசம்பர்மாதம் நடைபெற்று அதன் பெறுபேறுகள் எதிர்வரும் ஆண்டு ஜனவரி மாதம் 6 ஆம் திகதி அறிவிக்கப்படும். தொடர்ந்து ஜனவரி 20 ஆம் திகதி புதிய ஜனாதிபதி பதவியேற்பார்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17