கணைய அழற்சி பாதிப்புக்குரிய சிகிச்சை

Published By: Digital Desk 5

03 Aug, 2022 | 02:55 PM
image

எம்முடைய இரத்த சர்க்கரையின் அளவை இயல்பான நிலையில் வைத்திருப்பதற்கு பெரும் உதவி செய்யும் உடல் உறுப்பு கணையம். இந்த கணையம் எனும் உறுப்பு இன்சுலின் எனும் ஹோர்மோனை சுரப்பதுடன், எம்முடைய உணவுகளை ஜீரணிக்க மூன்று வகையான நொதிகளையும் உற்பத்தி செய்கிறது. 

பல்வேறு காரணங்களால் கணையத்தில் வீக்கம் அல்லது அழற்சி பாதிப்பு ஏற்பட்டால் இதன் செயல்பாட்டில் சமச்சீரற்ற தன்மை உண்டாகி, உயிருக்குப் பாரிய அச்சுறுத்தல் ஏற்படக்கூடும். இதற்குரிய நவீன சிகிச்சைகள் தற்போது அறிமுகமாகி முழுமையான நிவாரணத்தை வழங்கி வருகிறது.

எம்முடைய பித்தப்பையில் கற்கள் இருந்தாலோ அல்லது மது அருந்தும் பழக்கம் அதிகமாக இருந்தாலோ சில வகையான மருந்துகளின் எதிர் விளைவாகவாகவும் கணைய அழற்சிப் பாதிப்பு உண்டாகலாம். வேறு சிலருக்கு அடிவயிற்றில் காயம், உடற்பருமன், நோய் தொற்று, வயிற்றுப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட வேறு ஏதேனும் சத்திர சிகிச்சை ஆகியவற்றின் காரணமாகவும் கணையம் பாதிக்கப்படக்கூடும்.

கணைய அழற்சி திடீரென்று கடுமையான பாதிப்பாகவும், நாட்பட்ட பாதிப்பாகவும் இரண்டு வகைகளிலும் தாக்குகிறது. மேல் வயிற்று பகுதியில் வலி, இந்த வலி முதுகு வரை பரவுவது, காய்ச்சல், இதயத் துடிப்பு இயல்பான அளவைவிட வேகமாக துடிப்பது, குமட்டல், வாந்தி, திடீரென்று எடை குறைவு, உடலிலிருந்து வெளியேறும் மலம் துர்நாற்றம் வீசுதல் போன்ற அறிகுறிகள் மூலம் கணையத்தில் வீக்க பாதிப்பு ஏற்பட்டிருப்பதை உணரலாம்.

இத்தகைய பாதிப்பிற்கு உரிய காலத்தில் சிகிச்சை மேற்கொள்ளாவிடில், சிறுநீரக செயலிழப்பு, மூச்சு திணறல், நீரிழிவு, கணைய புற்றுநோய்.. ஆகிய பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்பதால், இதனை உரிய தருணத்தில் கண்டறிந்து சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.

ரத்த பரிசோதனை, அடிவயிற்று பகுதியில் அல்ட்ரா சவுண்ட் பரிசோதனை, சிடி ஸ்கேன் மற்றும் எம் ஆர் ஐ பரிசோதனை, எண்டோஸ்கோபிக் அல்ட்ரா சவுண்ட் பரிசோதனை மற்றும் மல பரிசோதனை ஆகியவற்றின் மூலம் கணையத்தின் பாதிப்பை துல்லியமாக மருத்துவர்கள் அவதானிப்பர்.

முதலில் மருந்துகள் மற்றும் உணவு முறை மாற்றத்தின் மூலம் இதற்கான நிவாரண சிகிச்சையை வழங்குவர். பிறகு இ ஆர் சி பி என்னும் முறையில் சிகிச்சை அளிப்பர். பிறகு பித்தப்பையில் ஏற்பட்டிருக்கும் கற்களை அகற்றி இதற்குரிய நிவாரணத்தை வழங்குவர். சிலருக்கு மட்டும் மிக அரிதாக கணைய உறுப்பினை அகற்றி நிவாரண சிகிச்சையை வழங்குவர். 

இதற்கு நோயாளிகளிடம் கணைய உறுப்பினை நீக்குவதால் ஏற்படும் அஜீரணம் குறித்து முழுமையான விழிப்புணர்வையும் ஏற்படுத்தி, உணவு முறையில் மாற்றத்தை உண்டாக்கி, அதனை உறுதியாக பின்பற்ற வலியுறுத்துவர். 

இதனுடன் மது அருந்தும் பழக்கத்தையும், புகைபிடிக்கும் பழக்கத்தையும் முற்றாக தவிர்த்து விட வேண்டும். குறைந்த கொழுப்பு சத்துள்ள உணவு முறை, திரவ நிலையிலான சத்துள்ள ஆகாரத்தை அதிக அளவு எடுத்துக் கொள்ளும் முறையையும் பின்பற்ற வேண்டும்.

டொக்டர் முத்துக்குமார்

தொகுப்பு அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அதீத கொழுப்பு பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

2024-04-18 17:30:48
news-image

ஈஸோபாகல் அட்ராஸியா எனும் உணவு குழாய்...

2024-04-17 17:43:31
news-image

நுரையீரல் உயர் குருதி அழுத்த பாதிப்பிற்குரிய...

2024-04-16 17:40:01
news-image

ஓடிடிஸ் மீடியா எனும் நடு காதில்...

2024-04-15 16:27:12
news-image

சிஸ்டிக் ஃபைப்ரோசிஸ் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-15 02:57:12
news-image

ஹீட் ஸ்ட்ரோக் எனும் பாதிப்பிற்குரிய சிகிச்சை

2024-04-12 01:31:06
news-image

பிறவி அட்ரீனல் ஹைப்பர்பிளேசியா எனும் சுரப்பியில்...

2024-04-10 22:59:16
news-image

ரூமாடிக் ஹார்ட் டிஸீஸ் எனும் இதய...

2024-04-09 17:25:41
news-image

யாழில் புற்றுநோய் அதிகரிப்பு ! கடந்த...

2024-04-09 09:37:01
news-image

கை நடுக்கம் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-08 18:33:54
news-image

உலக ஆரோக்கிய தினத்தில் உறுதி கொள்வோம்!

2024-04-08 10:00:07
news-image

டெஸ்டிகுலர் கேன்சர் எனும் விரைசிரை புற்றுநோய்...

2024-04-05 20:56:29