'மிஸ் குப்பை' என விமர்­சிக்­கப்­பட்டவர் மிஸ் யூனிவர்ஸ் தாய்­லாந்து பட்­டத்தை சுவீகரித்தார்

Published By: Digital Desk 5

03 Aug, 2022 | 12:24 PM
image

1998 ஆம் ஆண்டு பேங்கொக் நகரில் பிறந்­தவர் அனா சுவேன்கம். வறிய குடும்­பத்தைச் சேர்ந்­தவர் இவர். அனாவின் சுவேன்­காமின் தாய், முன்னர் குப்பை அகற்றும் ஊழி­ய­ராக பணி­யாற்­றி­யவர். இதனால், அனா பாட­சாலை மாண­வி­யாக இருந்­த­போது அவரை 'மிஸ் குப்பை' என சகாக்கள் கிண்­ட­ல­டித்­தனர்.

இந்­நி­லையில், கடந்த சனிக்­கி­ழமை இரவு நடை­பெற்ற மிஸ் யூனிவர்ஸ் தாய்­லாந்து இறுதிச் சுற்றில் 23 வய­தான அனா சுவேன்கம் இயாம் முத­லிடம் பெற்றார். மிஸ் யூனிவர்ஸ் தாய்­லாந்து 2022 அழ­கு­ரா­ணி­யாக முடி­சூட்­டப்­பட்­டுள்ள அவர், எதிர்­வரும் மிஸ் யூனிவர்ஸ் அழ­கு­ராணி போட்­டியில் தாய்­லாந்து சார்­பாக பங்­கு­பற்­ற­வுள்ளார்.

மிஸ் யூனிவர்ஸ் தாய்­லாந்து போட்­டி­யின்­போது, பார்­வை­யா­ளர்கள் மத்­தி­யிலும் அனா சுவான்கம் பிர­ப­ல­மாக இருக்­க­வில்லை. இப்­போட்­டிக்­கான உத்­தி­யோ­க­பூர்வ இணை­யத்­த­ளத்தில் நடத்­தப்ப்ட பொது­மக்­களின் வாக்­க­ளிப்பில் 3.2 சத­வீ­தத்­தையே அவர் பெற்­றி­ருந்தார்.

தாய்­லாந்து இத்­தா­லியக் கலப்­பு­டைய வெரோ­னிக்கா பகோனா 28.1 சத­வீத வாக்­கு­க­ளையும் தாய்­லாந்து அமெ­ரிக்க கலப்­புயை நிகோலின் லிம்ஸ்­னுகன் 25.2 சத­வீத வாக்­கு­க­ளையும் பெற்­றி­ருந்­தனர்.

வெளி­நாட்டுப் பெற்றோர் ஒரு­வரை கொண்­டி­ருக்­கா­தவர் என்­பதால், அனா சுவேன்கம் இப்­போட்­டியில் வெற்றி பெற முடி­யாது என இப்­போட்­டிக்கு முன்னர் சமூ­க­வ­லைத்­த­ளங்­களில் பலர் கூறி­யி­ருந்­தனர்.

இது குறித்து முன்னர் அளித்த செவ்­வி­யொன்றில், 'மிஸ் யூனிவர்ஸ் தாய்­லாந்து அழ­கு­ரா­ணி­யாக தெரி­வு­செய்­யப்­ப­டு­வ­தற்கு கலப்­பி­னத்­த­வ­ராக இருக்க வேண்டும் என்­பது ஒரு நிபந்­த­னை­யல்ல. நான் என்னால் முடிந்­த­ளவு வெற்­றி­க­ர­மாக செயற்­ப­டுவேன்' எனத் தெரி­வித்­தி­ருந்தார்.  

குப்பைத் தொட்­டி­களில் தமது பெற்றோர் கண்­டெ­டுத்த பொருட்­களே சிறு பரு­வத்தில் அனா சுவேன்­க­முக்கு விளை­யாட்டுப் பொருட்­க­ளாக கிடைத்­தன எனத் தக­வல்கள் வெளி­யா­கி­யி­ருந்­தன.

வறு­மைக்கு மத்­தி­யிலும் தனது கல்­வியில் கவனம் செலுத்­திய அனா சுவேன்கம், பேங்­கொக்கிலுள்ள கசேட்சார்ட் பல்­க­லைக்­க­ழ­கத்தில் ஹோட்டல் மற்றும் சுற்­றுலா முகா­மைத்­துவத் துறையில் கல்வி கற்று பட்­ட­தா­ரி­யானார்.

மிஸ் யூனிவர்;ஸ் தாய்­லாந்து அழ­கு­ரா­ணி­யாக தெரிவு செய்­யப்­பட்­டதன் மூலம், அனா குவேன்­க­முக்கு 10 லட்சம் தாய் பாட் (சுமார் ஒரு கோடி இலங்கை ரூபா, 22 லட்சம் இந்­திய ரூபா) பணப்­ப­ரிசு, ஆடம்­பர வீடு மற்றும் கார் ஆகியன பரிசாக வழங்கப்பட்டுள்ளன.

1965, 1998 ஆம் ஆண்டுகளில்  மிஸ் யூனிவர்ஸ் அழகுராணி பட்டத்தை தாய்லாந்து வென்றது. 3 ஆவது முறையாக, தான் இப்பட்டத்தை தாய்லாந்து சார்பில் வெல்வதற்கு அனா சுவேன்காம் இயாம் எதிர்பார்க்கிறார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52
news-image

இந்தோனேசியாவில் வெடித்து சிதறும் எரிமலை ;...

2024-04-18 11:01:39
news-image

முன்னாள் ஜனாதிபதி டுடெர்டேவை சர்வதேச நீதிமன்றத்தில்...

2024-04-17 19:37:05
news-image

தமிழக தேர்தல் நிலவரம் - தந்தி...

2024-04-17 16:09:34