போராட்டக்காரர்களுக்கு ஆதரவு - பிரித்தானிய பெண் குறித்து விசாரணை

Published By: Digital Desk 4

02 Aug, 2022 | 07:54 PM
image

( எம்.எப்.எம்.பஸீர்)

காலி முகத்திடல் போராட்டத்துக்கு உதவி ஒத்தாசை வழங்கும் வகையில் செயற்பட்டதாக கூறப்படும் பிரித்தானிய பெண் ஒருவர் தொடர்பில், வீசா விதிமுறைகளை மீறினாரா என்ற கோணத்தில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.

மருத்துவ வதிவிட வீஸா அனுமதியின் கீழ் கடந்த 2019 ஆகஸ்ட் 14 ஆம் திகதி முதல்  நீர் கொழும்பு மற்றும் மாலபே ஆகிய பகுதிகளில் தங்கியிருப்பதாக கூறப்படும் ' தெரபிஸ்ட்' ஒருவர் தொடர்பிலேயே இவ்விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.

இந்த பெண்  kayzfra5er  எனும் தனது இன்ஸ்டர்கிராம் பக்கம் ஊடாகவும் முகப்புத்தக பக்கம் ஊடாகவும்  போராட்ட நிலப்பரப்பில் வீடியோ காட்சிகளை பதிவிட்டு,  போராட்டக்க்காரர்களுக்கு பாதுகாப்பு தரப்பினர் கெடுபிடிகளை கொடுப்பதாக  உணர்வு பூர்வமான விடயங்களை சித்திரித்து வெளிநாடுகளில் உள்ளவர்களையும் போராட்டத்துக்கு அழைத்துள்ளதாக  தெரிவிக்கப்படுகின்றது.

 இந் நிலையிக்லேயே உளவுத் துறையின்  அறிக்கைகளை மையப்படுத்தி பாதுகாப்பு அமைச்சு வழங்கிய ஆலோசனைக்கு அமைய குடிவரவு குடியகல்வு திணைக்களம் , குறித்த பெண், வீசா நடைமுறைகளை மீறியுள்ளாரா என்பது தொடர்பிலும், இதன் பின்னர் அவருக்கு வதிவிட வீஸாவை நீடிப்பதா என்பது குறித்தும்  இந்த விசாரணைகளில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மாளிகாகந்த நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக...

2024-04-18 17:24:50
news-image

திருகோணமலை வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டிகள்...

2024-04-18 17:13:38
news-image

வரலாற்றில் இன்று : 1956 ஏப்ரல்...

2024-04-18 17:01:15
news-image

கோட்டா என்னை ஏமாற்றினார் - மல்கம்...

2024-04-18 16:58:51
news-image

திரியாய் தமிழ் மகாவித்தியாலயத்தின் குடிநீர்ப் பிரச்சினைக்கு...

2024-04-18 16:51:36
news-image

கட்டுத்துப்பாக்கி வெடித்ததில் குடும்பஸ்தர் காயம் -...

2024-04-18 16:18:49
news-image

"வசத் சிரிய - 2024" புத்தாண்டு...

2024-04-18 16:25:36
news-image

அட்டன் – கொழும்பு மார்க்கத்தில் மாத்திரமே...

2024-04-18 16:20:52
news-image

கண்டி நகரில் தீவிரமடையும் குப்பை பிரச்சினை!

2024-04-18 16:31:50
news-image

காத்தான்குடி பாலமுனை கடற்கரையில் பெண் ஒருவரின்...

2024-04-18 15:52:14
news-image

பிட்டிகல பகுதியில் துப்பாக்கிச் சூடு ;...

2024-04-18 15:42:00
news-image

'டைம்' சஞ்சிகையின் ஆளுமை மிக்க 100...

2024-04-18 15:23:39