அய்மன் அல் ஜவஹிரியை கொல்வதற்கு பைடனும் அவரது குழுவினரும் எவ்வாறு திட்டமிட்டனர்

Published By: Rajeeban

02 Aug, 2022 | 04:07 PM
image

சிஎன்என்

அய்மன் அல் ஜவஹிரியை கொல்வதற்கான  உத்தரவை பிறப்பிப்பதற்கு முன்னர் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ஜவஹிரி எங்கு ஒளிந்திருக்கின்றார் என்ற விடயத்தை தனிப்பட்டரீதியில் அறிந்துகொள்ள விரும்பினார்.

ஜோ பைடனும் அவருக்கு நெருக்கமான குழுவினரும் பல மாதங்களாக மேற்கொண்ட இரகசிய திட்டமிடல்களின்  விளைவாகவே காபுலில் அமெரிக்கா மேற்கொண்ட ஆளில்லா விமானதாக்குதலில் அய்மன் அல் ஜவஹிரி கொல்லப்பட்டார்.

தாக்குதலிற்கான முன்தயாரிப்பு நடவடிக்கைகளின் போது ஜவஹிரி மறைந்திருந்த  வீட்டின் மாதிரியை புலனாய்வு பிரிவினர் உருவாக்கி அதனை வெள்ளை மாளிகையில் பைடனின் அறைக்குள்  வைத்தனர்.

அவர் தாக்குதலிற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய்வதற்கு உதவியாக இதனை அவர்கள் உருவாக்கினர்.

உலகின் மிகவும் தேடப்பட்ட - செப்டம்பர் 11 தாக்குதலின் சூத்திரதாரியை கொல்லும் போது ஆப்கான் தலைநகரில் அப்பாவி பொதுமக்களையும் கொல்லவேண்டிய ஆபத்தை பைடன் எதிர்கொண்டார்.

கடந்த வருடம் அமெரிக்கா இராணுவம் அவசரஅவசரமாக வெளியேறியவேளை  மேற்கொள்ளப்பட்ட ஆளில்லா விமானதாக்குதல்காரணமாக பொதுமக்கள் கொல்லப்பட்டது போன்ற சம்பவம் மீண்டும் நிகழக்கூடிய ஆபத்து  காணப்பட்டது.

ஜவஹிரி மீதான தாக்குதல் குறித்த விபரங்களை அறிவிப்பதற்கு பைடன் தயாராகிக்கொண்டிருந்தவேளை தாக்குதல் திட்டங்களை திட்டமிடல்களை சிரேஸ்ட இராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த மாத  இறுதியில் தாக்குதலை மேற்கொள்வதற்காக , கடந்த ஒரு மாதகாலமாக திட்டமிடப்பட்டவேளை ஜவஹிரியின் குடும்பத்தவர்கள் உட்பட  பொதுமக்கள் கொல்லப்படுவதை தவிர்ப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு பைடன் தொடர்ச்சியாக தனது அதிகாரிகளை கேட்டிருந்தார்.

தாக்குதலை மேற்கொள்வது குறித்த இறுதி கலந்துரையாடல்கள் மற்றும் தாக்குதலிற்கான அனுமதியை வழங்குதல் போன்ற சந்தர்ப்பங்களில் கொவிட்டினால் பாதிக்கப்பட்டிருந்த பைடன் ,வெற்றியை அறிவிப்பதற்காக வெள்ளை மாளிகை பல்கனிக்கு வந்தார்.

கடந்த வருடம் அமெரிக்கா தனது படையினரை ஆப்கானில் இருந்து வெளியேற்றியது முதல் அவர் சந்தித்து வரும் உள்நாட்டு அரசியல் நெருக்கடிகளில் சிக்குண்டுள்ள ஜனாதிபதிக்கு இது ஒரு வெற்றித்தருணம்.

உலகெங்கலும் உள்ள மக்கள் இனி கொடிய உறுதியான கொலையாளி குறித்து அச்சப்படத்தேவையில்லை,எங்களிற்கு தீங்கிழைக்க முயல்பவர்களிடமிருந்து எங்கள் மக்களை காப்பாற்றுவதற்கான உறுதிப்பாட்டையும் திறனையும் அமெரிக்கா தொடர்ந்து வெளிப்படுத்தி வருகின்றது என வெள்ளை மாளிகையின் புளுருமின் பல்கனியிலிருந்து பைடன் தெரிவித்தார்.

காபுலில் உள்ள வீடொன்றில் ஜவஹிரி இருப்பது குறித்து முதலில் ஏப்பிரல் மாதம் ஜனாதிபதிக்கு தெரிவிக்கப்பட்டது,பல மாதங்களாக ஜவஹிரிக்கு ஆதரவு வழங்கிவரும்தரப்பினர் குறித்து அமெரிக்க அதிகாரிகள் அறிந்திருந்தனர்.பல புலனாய்வு தரப்புகள் மூலம் ஜவஹிரியின் குடும்பத்தினரை அடையாளம் கண்டிருந்தனர்.( மனைவி மகள் குழந்தைகள்) 

காபுலில் உள்ள ஜவஹிரியின் வீட்டிற்கு எவரும் தங்களை பின்தொடர்ந்து வருவதை தடுப்பதற்காக அந்த பெண் பயங்கரவாத தந்திரோபாயமொன்றை பயன்படுத்தினார் என அதிகாரிகள் கருதுகின்றனர்.கடந்த வருடம் அந்த பகுதிக்கு வந்த பின்னர்ஜவஹிரி அந்த வீட்டை விட்டு வெளியே செல்லவில்லை.

மாதங்கள் கடந்ததும் அமெரிக்க அதிகாரிகள் அந்த வீட்டில் உள்ளவர்கள் செயற்படும் விதங்கள் குறித்த தெளிவான தகவல்களை பெறத்தொடங்கினர், ஜவஹிரி அந்த வீட்டின் பல்கனிக்கு வந்து குறிப்பிட்ட நிமிடங்கள் நிற்பது வழமை  என்பது குறித்து விபரங்களையும் துல்லியமாக பெற்றனர்.

அதிகாரிகள் அவரது நடவடிக்கைகளை கண்காணித்துக்கொண்டிருந்த அதேவேளை அந்த வீட்டின் கட்டமைப்பை இரகசியமாக ஆராயும் நடவடிக்கைகளும் இடம்பெற்றன,கட்டிடங்;களிற்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தாமல் உலகின் முதலாவது பயங்கரவாத இலக்கை கொலை செய்வதே இதன் நோக்கம்.

அந்த கட்டிடத்தில் வசித்த ஜவஹிரியின்  குடும்பத்தினர் உட்பட பொதுமக்கள் உயிரிழப்பை தவிர்ப்பதே பைடனின் மனதிலும் அவரது குழுவினர் மனதிலும் முக்கியமான விடயமாக காணப்பட்டது.

அந்த வீட்டில் இருப்பவர்கள் குறித்த முழுமையான விபரங்களை பெறுவதில் அரசாங்கத்தின் சுயாதீன ஆய்வாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.

காபுலின் புறநகர் பகுதியில் உள்ள அந்த கட்டிடம் தனக்கேரிய சவால்களை கொண்டிருந்தது.

பொதுமக்கள் அதிகமாக வாழும் குடியிருப்பு பகுதியில் அந்த வீடு காணப்பட்டது.

பைடனிடம் தாக்குதலிற்கான திட்டங்களை சமர்ப்பிப்பதற்கு முன்னர் தங்கள் தகவல்கள் 100 வீதம் உறுதியாகயிருப்பதை உறுதி செய்வதற்கு அதிகாரிகள் முயன்றனர்.

இந்த விடயம் வெளியில் கசிவது குறித்து அவர்கள் அதிக கவலை கொண்டிருந்தனர்,

திட்டங்கள் குறித்து சிறிய தெரிவு செய்யப்பட்ட குழுவினருக்கு மாத்திரம் தகவல் தெரிந்திருந்தது.

ஜவஹிரி மீதான தாக்குதல் இரண்டு வருடத்திற்கு  முன்னர் கடத்தப்பட்ட அமெரிக்க பிரஜையான மார்க் பிரெரிச்சை விடுவிக்கும் முயற்சிகளிற்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்பது குறித்து பைடன் கரிசனை கொண்டிருந்தார்.

மே- ஜூன் மாதத்தில் பைடனிற்கு அதிகாரிகள் தகவலை வழங்கிய வண்ணமிருந்தனர்.

ஜூலைமுதலாம் திகதி உத்தேச நடவடிக்கை குறித்து தெரிவிப்பதற்காக முக்கிய தேசிய பாதுகாப்புஅதிகாரிகளை பைடன் வெள்ளை மாளிகைக்கு அழைத்தார்.

அங்கு தெரிவிக்கப்பட்ட விடயங்கள் மற்றும் புலனாய்வு விபரங்களில் பைடன் மூழ்கிப்போனார்,என தெரிவித்த சிரேஸ்ட அதிகாரி அவர்எங்களிற்கு என்ன தெரியும் எப்படி தெரியும் என்பது குறித்து  கேள்வி மேல் கேள்வி கேட்டார் என குறிப்பிட்டார்.

புலனாய்வுபிரிவினர்  உருவாக்கி வெள்ளை மாளிகைக்கு கொண்டுவந்த ஜவஹிரியின் வீடு குறித்து பைடன் விசேடமாக கவனம் செலுத்தினார்.

சூரிய ஒளியில் வீடு எப்படி காணப்படும் , வீடு எதனால் கட்டப்பட்டது, ஜவஹிரியை இலக்குவைக்கும் நடவடிக்கையை காலநிலை எவ்வாறு பாதிக்கும்  என பைடன் பல கேள்விகளை கேட்டார்.

பொதுமக்கள் கொல்லப்படுவதை தவிர்ப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படுகின்றன என்பதை உறுதி செய்வதில் பைடன் முக்கிய கவனம் செலுத்தினார் என அதிகாரியொருவர் தெரிவித்தார்.

அந்த கட்டிடத்தின் திட்டங்கள் தாக்குதல் அதனை எவ்வாறு பாதிக்கும் என்பது குறித்த மேலதிக விபரங்களை கோரிய பைடன் அன்று மதியம் காம்ப்டேவிட்டிற்கு சென்றார்.

ஆனால் அவரது குழுவினர் வெள்ளை மாளிகையில் தங்கியிருந்து பல தடவைகள் கூடி தங்கள் திட்டமிடல்களை பூர்த்திசெய்ய முயன்றனர்.

ஜனாதிபதியின் கேள்விகளிற்கு பதிலளிப்பதற்கும் உயிரிழப்புகளை குறைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதை உறுதி செய்வதற்கும் அவர்கள் முயன்றனர்.

அதேவேளை ஜவஹிரி தொடர்பான புலனாய்வுகளை ஆராய்வதற்கும் தாக்குதலிற்கான சட்டபூர்வமான அடிப்படைகளை உருவாக்குவதற்குமான முயற்சிகளில் பைடனின் அதிகாரிகள் ஈடுபட்டனர்.

25ம் திகதி கொவிட் காரணமாக வெள்ளை மாளிகையில் தன்னை தனிமைப்படுத்தியிருந்த பைடன் இறுதியாக ஒரு முறை தகவல்களை பெறுவதற்காக தனது அணியினரை அழைத்தார்.

பைடன் பொதுமக்களின் உயிரிழப்புகளை எவ்வாறு குறைக்கலாம் என்பது குறித்த மேலதிக தகவல்களை  கேட்டார்என அதிகாரியொருவர் தெரிவித்தார்.

அவர் வீட்டின் அமைப்பை பற்றி கேட்டறிந்தார்,மூன்றாவது மாடியில் ஜன்னல் மற்றும் கதவுகளிற்கு பின்னால் அறைகள் அமைந்துள்ளமை குறித்து கேள்வி எழுப்பினார்.

தாக்குதலால் என்ன பாதிப்பு ஏற்படும் என்பது குறித்தும் பைடன் கேள்வி எழுப்பினார்.

அவர் தனது அணியின் ஒவ்வொரு அணியினரிடமும் அவர்களது கருத்தை கேட்டார்.

இறுதியில் இலக்கை குறிவைத்து துல்லியமான தாக்குதலை மேற்கொள்ளுமாறு அவர் உத்தரவிட்டார்.

இரண்டு நாட்களின் பின்னர் காபுலின் பல்கனியை இலக்குவைத்து இரண்டு ஹெல்பயர் ஏவுகணைகள் ஏவப்பட்டன.

பல புலனாய்வு தரப்புகள் அது அய்மன் அல் ஜவஹிரி என்பதை உறுதி செய்தன.

அந்த வீட்டின் ஏனைய பகுதிகளில்இருந்த ஜவஹிரியின் குடும்பத்தினருக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

மீண்டும் கொரோனா பாதிப்பினால் வெள்ளை மாளிகையில் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டிருந்த பைடனிற்கு தாக்குதல் ஆரம்பமானது முடிவிற்கு வந்தது குறித்த தகவல் தெரிவிக்கப்பட்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அக்குராணை கிராமமும் பொது மக்கள் எதிர்கொள்ளும்...

2024-03-29 17:17:02
news-image

பிரித்தானிய மக்களை கண்ணீர் சிந்தவைத்த இளவரசி...

2024-03-29 13:17:06
news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48