வங்குரோத்து நிலையில் உள்ள இலங்கை தனது சிறுவர்களிற்கு உணவளிப்பதற்காக அவசர உதவியை கோருகின்றது

Published By: Rajeeban

01 Aug, 2022 | 05:21 PM
image

ஏ.பி

இலங்கையில் சிறுவர்கள் மத்தியில் வேகமாக அதிகரித்து வரும்மந்தபோசாக்கினை எதிர்கொள்வதற்கான அவசர உதவியை இலங்கை கோரியுள்ளது.

பொருளாதார நெருக்கடி காரணமாக பத்தில்ஒருவர் அரசாங்கத்தின் உதவியை எதிர்பார்த்திருக்கும் நிலை உருவாகிவரும் நிலையிலேயே இலங்கை இந்த வேண்டுகோளை விடுத்துள்ளது.

போதிய உணவின்றி அவலத்தில் சிக்குண்டுள்ள ஆயிரக்கணக்கான சிறுவர்களிற்கு உணவளிப்பதற்காக தனியாரிடமிருந்து உதவியை கோருவதாக மகளிர் சிறுவர் விவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

சுதந்திரத்தின் பின்னரான இலங்கையின் மோசமான பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள வங்குரோந்து நிலையில் உள்ள அரசாங்கம் நலன்புரி திட்டங்களை முன்னெடுக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

கொவிட் பெருந்தொற்று உச்சத்தில் காணப்பட்டவேளை நிலைமை மோசமாகயிருந்தது தற்போது பொருளாதார நெருக்கடி காரணமாக மிகமோசமானதாக மாறியுள்ளது என அமைச்சின் செயலாளர் நெய்ல் பண்டார ஹப்புகின்னே செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

2021 இல் ஐந்து வயதிற்கு உட்பட்ட 570.000 சிறுவர்கள் மத்தியில் மந்தபோசனையால் பாதிக்கப்பட்ட  127,000 சிறுவர்கள் இருப்பதை மதிப்பிட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

அதன் பின்னர் பணவீக்கத்தின் முழுமையான தாக்கம் மற்றும்உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களிற்கான பற்றாக்குறை காரணமாக  இந்த எண்ணிக்கை பல மடங்காக அதிகரித்திருக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்திடமிருந்து நேரடி உதவி பெறுபவர்களின் எண்ணிக்கை கடந்த வருடம் இரண்டுமடங்காகியுள்ளது சனத்தொகையில் 90 வீதமானவர்கள் அரசாங்கத்தையே உணவிற்காக நம்பியுள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19