14 வயது சிறு­வ­னுடன் பாலியல் உறவில் ஈடு­பட்ட கோடீஸ்­வரி விரை­வாக பிணையில் விடுக்­கு­மாறு நீதி­மன்­றிடம் கோரிக்கை விளக்­க­ம­றி­யலில் உள்ள காலத்தில் பல மில்­லியன் டொலர் இழப்பு ஏற்­ப­டு­கி­றதாம்

Published By: Vishnu

01 Aug, 2022 | 02:57 PM
image

14 வய­தான சிறு­வ­னுடன் பாலியல் உறவில் ஈடு­பட்­ட­தாக குற்­றம்­சு­மத்­தப்­பட்­டுள்ள, கோடீஸ்­வ­ரி­யான அவுஸ்­தி­ரே­லியப் பெண்­ணொ­ருவர், தன்னை விளக்­க­ம­றி­ய­லி­லி­ருந்து விரை­வாக விடு­விக்­கு­மாறு கோரி­யுள்ளார். தான் சிறை­யி­லுள்ள காலத்தில் தனது நிறு­வனம் மில்­லியன் கணக்­கான டொலர்­களை இழந்து வரு­கி­றது என அவர் இக்­கோ­ரிக்கைக் காரணம் கூறி­யுள்ளார்.

45 வய­தான சவன்னாஹ் டெய்ஸ்லி எனும் பெண்ணே இவ்­வாறு சிறையில் அடைக்­கப்­பட்­டவர். சிட்னி நகரைச் சேர்ந்த பிர­பல குதிரை வளர்ப்­பாளர் ரொஸ் டெய்ஸ்­லியின் மகள் இவர். ஸ்மார்ட் கிளீன்ஸ் எனும் நிறு­வ­னத்­தையும் அவர் நடத்தி வரு­கிறார். சமூ­க­வ­லைத்­த­ளங்கள் மூலமும் டெய்ஸ்லி பிர­ப­ல­மா­னவர். இன்ஸ்­டா­கி­ராமில் அவரை 40,000 பேர் பின் தொடர்­கின்­றனர். 

14 வய­தான ஒரு சிறு­வ­னுடன் பாலியல் உறவில் ஈடு­பட்­ட­தாக சவன்னாஹ் டெய்ஸ்லி மீது குற்­றம்­சு­மத்­தப்­பட்­டது. கடந்த வருடம் மே 21 ஆம் திகதி ஒரே நாளில் 4 தட­வைகள் மேற்­படி சிறு­வ­னுடன் அவர் பாலியல் உறவில் ஈடு­பட்டார் என குற்­றம்­சு­மத்­தப்­பட்­டுள்­ளது. கடந்த ஜூன் 27 ஆம் திகதி அவர் கைது செய்­யப்­பட்டார்.

சிட்­னிக்கு அரு­கி­லுள்ள அதிக பாது­காப்பு கொண்ட சில்­வர்­வோட்டர் சிறையில் டெய்ஸ்லி அடைக்­கப்­பட்­டுள்ளார். 

கடந்­த­வாரம் சிட்­னி­யி­லுள்ள நீதி­மன்­றத்தில் அவர் ஆஜர்­ப­டுத்­தப்­பட்டார். அப்­போது, அவர் தன்னை பிணையில் செல்ல அனு­ம­திக்­கு­மாறு நீதி­ப­தி­யிடம் சவன்னாஹ் டெய்ஸ்லி கோரினார். 

விளக்­க­ம­றி­யலில் இருப்­பதால் தனது மன­நலம் மிகவும் பாதிப்­ப­டை­வ­தா­கவும், தான் சிறையில் இருக்கும் காலத்தில் தனது நிறு­வனம் மில்­லியன் கணக்­கான டொலர்­களை இழப்­ப­தா­கவும் அவர் கூறினார்.

டெய்ஸ்­லியின் சட்­டத்­த­ரணி கெப்­ரியெல் பசீர், கூறு­கையில், 'தனது புதிய உற்­பத்­திகள் தொடர்­பான பணி­களை மேற்­கொள்­ளவும், புதிய பெய­ருக்­கான ஊக்­கு­விப்பு நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­ள­வும்­கூ­டிய ஒரே­யொரு நப­ராக சவன்னாஹ் டெய்ஸ்­லியே உள்ளார். அவர் விடு­விக்­கப்­ப­டா­விட்டால் அவரின் நிறுவனம் உடனடியாக 300,000 டொலர்களை இழக்கும்' என்றார்.

தான் பிணையில் செல்வதற்கு 100,000 டொலர்களை பிணையாக செலுத்துவதாக டெய்ஸ்லி கூறினார். அதை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டு பிணையில் செல்ல அனுமதித்தது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right