கொத்மலை கிண்ணத்தை ஸாஹிரா சுவீகரித்தது

Published By: Ponmalar

07 Nov, 2016 | 04:52 PM
image

யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் சனிக்கிழமை இரவு மின்னொளியில் நடைபெற்ற கொத்மலை கிண்ண 19 வயதுக்குட்பட்ட பாடசாலை அணிகளுக்கு இடையிலான இறுதிப் போட்டியில் யாழ். பத்திரிசியார் அணியை எதிர்த்தாடிய மருதானை ஸாஹிரா அணி 3 க்கு 0 என்ற கோல்கள் அடிப்படையில் வெற்றிபெற்று கொத்மலை கிண்ணத்தை சுவீகரித்தது.

நான்கு குழுக்களில் 28 அணிகள் பங்குபற்றிய இச் சுற்றுப் போட்டியில் குழு சியில் இடம்பெற்ற ஸாஹிரா ஒரு போட்டியில்தானும் தோல்வி அடையாமல் சம்பியன் பட்டத்தை சுவீகரித்தது.

இறுதிப் போட்டியில் முழுமையான ஆதிக்கத்தை வெளிப்படுத்திய ஸாஹிரா அணியினர் 30 ஆவது நிமிடத்தில் எம். ஷவ்ரான் மூலம் முதலாவது கோலைப் போட்டது.

இடைவேளையின் பின்னர் எம். சஹீல் 22 யார் தூர ப்றீ கிக் மூலம் அலாதியான கோல் ஒன்றைப் போட்டார்.

80ஆவது நிமிடத்தில் மீண்டும் சஹீலின் ப்றீ கிக்கை முறையாகப் பயன்படுத்திக்கொண்ட எம். ஹம்மாத் தனது தலையால் பந்தை முட்டி ஸாஹிராவின் மூன்றாவது கோலைப் போட்டார். 

இறுதிப் போட்டி நாயகனாக எம். சஹீல் தெரிவானதுடன் சிறந்த கோல்காப்பாளராக ஸாஹிராவின் கலீல் உர் றஹ்மான் தெரிவானார்.

இப் போட்டிக்கு முன்பதாக நடைபெற்ற போட்டியில் வென்னப்புவை புனித ஜோசப் வாஸ் அணியை சந்தித்த கடந்த வருட சம்பியன் இளவாலை புனித ஹென்றியரசர் அணி 3 க்கு 0 என்ற கொல்கள் அடிப்படையில் வெற்றிபெற்று 3ஆம் இடத்தைப் பெற்றது.

புனித ஹென்றியரசர் சார்பாக எஸ். ரூபன்ராஜ் (22 நி.), ஜீ. அன்ரனிராஜ் (54 நி.), என். ஏ. ரமேஷ் (79 நி.) ஆகியோர் கோல்களைப் போட்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35
news-image

ஸ்ரீ லயன்ஸ் அழைப்பு வலைபந்தாட்டப் போட்டியில்...

2024-03-26 19:25:58
news-image

பூட்டானை வீழ்த்தியது இலங்கை : கால்பந்தாட்டத்திலிருந்து...

2024-03-26 16:48:31
news-image

சீன கால்பந்தாட்டச் சங்கத்தின் முன்னாள் தலைவருக்கு...

2024-03-26 11:53:22
news-image

ஐ.பி.எல் 2024 : பஞ்சாப் கிங்ஸை...

2024-03-26 00:02:20