கொள்கை வகுப்பாளர்களிடம் ஆதிக்கம் செலுத்துதல் மற்றும் வழக்குத் தொடரல் போன்றவற்றின் ஊடாக புகையிலை ஒழிப்பு நடவடிக்கைகளை முறியடிப்பதற்காக புகையிலை தொழிற்துறை மேற்கொள்ளும் முயற்சிகளை தடுக்க வேண்டும் என்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.

 “அவர்கள் பல்வேறு வழிகளில் கொள்கை வகுப்பாளர்களிடம் ஆதிக்கம் செய்ய முயற்சித்து வருவதை நாம் அறிவோம். அவர்கள் அரசாங்க சட்டத்தை சவாலுக்குட்படுத்துவதற்கு வழக்கு தொடுநர்களுக்கு உதவி வருவதுடன், ஊடகங்களையும் வற்புறுத்தி வருகின்றனர். இது என்னைப் பொறுத்த வரையில் ஒரு நாட்டின் உள் விவகாரங்களில் நேரடியாக தலையிடுவதாகும். புகையிலை தொழிற்துறையுடன் நாம் எந்த வகையிலும் தயவுதாட்சனை காட்டவேண்டிய தேவையில்லை” என்று ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

 “2015ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் நான் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டது முதல் எனது தேசிய நிகழ்ச்சி நிரலில் புகையிலை மற்றும் மதுசாரத்தை ஒழிப்பது முதலிடத்தில் இருந்தது. போதைப்பொருள் தொடர்பாக கண்காணிப்பதற்கு ஜனாதிபதி செயலணியொன்றை நான் அமைத்தேன்”

 “வளி மாசடைதல் சட்டங்கள், பொது இடங்கள் மற்றும் மூடிய வெளிகளில் புகைத்தலை தடை செய்தல் மூலமும் மற்றும் பல்வேறு வழிகளிலும்  புகையிலைப் பிரச்சினையை நாம் தீர்த்து வருகிறோம்” என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.