ஜப்பான் நிறுவனத்திடம் இலஞ்சம் கோரப்பட்டதாக வெளியான செய்திகள் குறித்த அறிக்கை ஜனாதிபதியின் செயலாளரிடம் கையளிப்பு

Published By: Digital Desk 4

31 Jul, 2022 | 10:13 PM
image

ஜப்பானின் தய்சே நிறுவனத்திடம் இருந்து இலஞ்சம் கோரப்பட்டதாக சமூக ஊடகங்கள் உள்ளிட்ட இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்களில் வெளியான செய்திகள் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணை நடத்துமாறு முன்னாள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவின் வேண்டுகோளுக்கு இணங்க நியமிக்கப்பட்ட மூவரடங்கிய விசாரணைக் குழுவின் அறிக்கை இன்று (31) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில், ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயகவிடம் கையளிக்கப்பட்டது.

விசாரணைக் குழுவின் தலைவரும், ஓய்வுபெற்ற மேல் நீதிமன்ற நீதிபதியுமான ஜனாதிபதி சட்டத்தரணி குசலா சரோஜனி வீரவர்தனவினால் குழுவின் அறிக்கை ஜனாதிபதியின் செயலாளரிடம் கையளிக்கப்பட்டதுடன், குழுவின் ஏனைய உறுப்பினர்களான ஓய்வுபெற்ற சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் எஸ்.எம். விக்கிரமசிங்க, எஸ்.எம்.ஜி.கே. பெரேரா ஆகியோரும் இச்சந்தர்ப்பத்தில் கலந்துகொண்டனர்.

இந்த மூவரடங்கிய விசாரணைக் குழு கடந்த ஜூலை 22ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் நியமிக்கப்பட்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04