பொது தகவல் தொடர்பாடல் பரீட்சை அனுமதிப்பத்திரங்கள் தற்போதைய நிலையில் சகல பாடசாலைகளின் அதிபர்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் அனுமதிப்பத்திரங்கள் கிடைக்கப்பெறாவிட்டால் 1911 அவசர தொலைபேசிக்கு தொடர்புக்கொண்ட தெரிவிக்கமுடியும் என்பதோடு , பரீட்சைகள் அமைப்பு மற்றும் பெறுபேறுகள் திணைக்களத்திலும் தெரிவிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொது தகவல் தொடர்பாடல் பரீட்சை எதிர்வரும் 19 ஆம் திகதி சனிக்கிழமை இடம்பெறுவுள்ளதுடன், குறித்த பரீட்சைக்கு நாடளாவிய ரீதியில் ஒரு இலட்சத்து 55 ஆயிரத்து 834 பேர் தோற்றவுள்ளனர்.