45 வீதமான ஹோட்டல் முன்பதிவுகள் திடீரென இரத்தானமைக்கு ஆர்ப்பாட்டங்களே காரணம் - சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை

Published By: Digital Desk 5

31 Jul, 2022 | 06:53 AM
image

(எம்.எம்.சில்வெஸ்டர்)

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருவதற்காக  மேற்கொண்டிருந்த ஹோட்டல் முன்பதிவுகளில் 45 சதவீதமானவை அண்மைக்காலமாக நாட்டில் இடம்பெற்று வந்திருந்த போராட்டங்கள்  மற்றும் ஆர்ப்பாட்டங்கள் காரணமாக திடீரென இரத்து செய்யப்பட்டுள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தலைவியான தம்மிக்கா விஜேசிங்க தெரிவித்தார்.

இவ்வாறான விடயங்கள் சுற்றுலாத் துறையில் மிகவும் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன், எரிபொருள் மற்றும் எரிவாயு பற்றாக்குறை,  மின்வெட்டு ஆகியவை சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைவதற்கு ஏனைய முக்கிய காரணிகளாகும்.

இம்மாதம் இதுவரையான காலப்பகுதியில் சுற்றுலாப் பயணிகளின் வருகை 10 வீதத்தால் அதிகரித்துள்ளதாகவும், இம்மாதத்தில் இதுவரை 42,925 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். சாதாரணமாக, ஒரு வாரநாட்களில் சுற்றுலாப் பயணிகளின் சராசரி எண்ணிக்கை 1533 ஆகும்.  இது வார இறுதி நாட்களில் சராசரி எண்ணிக்‍கை 1900 ஆகும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

பொதுவாக ஆகஸ்ட் மாதம் இலங்கைக்கு அதிக சுற்றுலாப் பயணிகள் வரும் காலமாகும். எனவே இக்காலப்பகுதியில் அதிகளவான சுற்றுலாப் பயணிகளை நாட்டிற்கு வரவழைக்கும் வகையில் விசேட வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 

சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் கண்டி பெரஹராவை இலக்காகக் கொண்டு சுற்றுலா ஊக்குவிப்பு வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், சுற்றுலாப் பயணிகளின் போக்குவரத்த்திற்காக எரிபொருள் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தலைவியான தம்மிக்கா விஜேசிங்க குறிப்பிட்டார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02
news-image

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கோழி இறைச்சி...

2024-04-18 17:43:51
news-image

மாளிகாகந்த நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக...

2024-04-18 17:24:50
news-image

திருகோணமலை வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டிகள்...

2024-04-18 17:13:38
news-image

வரலாற்றில் இன்று : 1956 ஏப்ரல்...

2024-04-18 17:01:15
news-image

கோட்டா என்னை ஏமாற்றினார் - மல்கம்...

2024-04-18 16:58:51
news-image

திரியாய் தமிழ் மகாவித்தியாலயத்தின் குடிநீர்ப் பிரச்சினைக்கு...

2024-04-18 16:51:36