அவசர கால சட்டத்துக்கு எதிராக உரிமை மீறல் மனு : அம்பிகா தாக்கல் : இடைக்கால தடை உத்தரவும் கோரல் 

Published By: Vishnu

29 Jul, 2022 | 08:16 PM
image

( எம்.எப்.எம்.பஸீர்)

பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளை சட்டத்தின் கீழ் ஜனாதிபதியால் வெளியிடப்பட்டுள்ள அவசரகால சட்ட அமுலாக்கத்திற்கான  2289/07 ஆம் இலக்க வர்த்தமானியை வலுவிழக்க செய்வதற்கான உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளரான சட்டத்தரணி அம்பிகா சற்குணநாதன் இந்த மனுவை 28 ஆம் திகதி தாக்கல் செய்துள்ளார்.

ஜனாதிபதிக்கு பதிலாக  சட்டமா அதிபர்,  ஜனாதிபதி செயலாளர் முன்னாள் காமினி செனரத், தற்போதைய ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்க, பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்ன ஆகியோரை பிரதிவாதிகளாக பெயரிட்டே அவர் இம்மனுவை தாக்கல்ச் செய்துள்ளார்.

அவசரகால சட்டத்தை அமுல்படுத்தியுள்ளமையால், அரசியலமைப்பில் உறுதி செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக தீர்ப்பளிக்குமாறு மனுதாரர் உயர் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.

பொதுமக்கள் பாதுகாப்பு  கட்டளை சட்டத்தின் கீழ், கடந்த 17 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் ஜனாதிபதியினால் அமுல்படுத்தப்பட்ட அவசரகால சட்டம் சட்டவிரோதமாக கைது செய்தல், தடுத்து வைத்தல், சித்திரவதைக்குள்ளாக்குதல் போன்ற செயற்பாடுகளுக்கு வழி சமைப்பதாக எடுத்துக்கூறியுள்ள முறைப்பாட்டாளர், கடந்த 22 ஆம் திகதி காலி முகத்திடலில் ஆயுதமேந்திய படையினர் செயற்பட்ட விதம் அதற்கான எடுத்துக்காட்டு எனவும் மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அவசரகால  நிலை பிரகடனத்தில்  குறிப்பிடப்பட்டுள்ள 9,11,12,13,14,15,17,18,20,21,26,34,36,37 ஆகிய பிரிவுகள் அரசியலமைப்புக்கு முரணானது என மனுவில் மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த அவசர கால  நிலை பிரகடன வர்த்தமானியானது, அரசியலமைப்பு ஊடாக உருதி செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளான  அரசியலமைப்பின் 10,11,12(1), 12(2), 13(1), 13 (2),13 (3), 13(4), 13(5),14 A, 14(1)அ, 14(1) ஆ, 14(1)ஈ, 14(1) எ, 14(1)ஏ ஆகிய  உறுப்புரைகளை மீறுவதகாவௌய்ம் அத்துடன் அரசியலமைப்பின் 4 (ஊ), 111 இ உறுப்புரைகளுக்கு முரணாக அவை அமைந்துள்ளதாகவும் மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதனால் ஜனாதிபதியால் வெளியிடப்பட்டுள்ள அவசரகால கட்டளைகள் அடங்கிய வர்த்தமானியை இடைநிறுத்துவதற்கான இடைக்கால உத்தரவை பிறப்பிக்குமாறும்  மனுதாரர் சட்டத்தரணி அம்பிகா சற்குணநாதன்  மனுவூடாக கோரிக்கை விடுத்துள்ளார்.

குறித்த சட்டத்தினூடாக ஜனாதிபதி அல்லது ஜனாதிபதியால் அதிகாரமளிக்கப்ப்ட்ட  அதிகாரியால் மேலதிக கட்டளைகள் பிறப்பிக்கப்படுவதை தடுத்து, இடைக்கால உத்தரவு பிறப்பிக்குமாறும் இலங்கை சட்டத்தரணி அம்பிகா சற்குணநாதன் உயர் நீதிமன்றத்தில்  இம்மனுவூடாக மேலும் கோரியுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58