முன்னாள் பிரதி அமைச்சர் சரத் குமார குணரட்னவை பிணையில் விடுதலை செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீர்கொழும்பு மேல் நீதிமன்றம் குறித்த உத்தரவினை இன்று (07) பிறப்பித்துள்ளது.

2002 ஆம் ஆண்டு இடம்பெற்ற விபத்து சம்பவம் ஒன்று தொடர்பில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் கடந்த 24 ஆம் கைதுசெய்யப்பட்டு இன்றுவரை  விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.