சனத் நிஷாந்த போன்றோருக்கு மக்கள் வெகுவிரைவில் சிறந்த பாடத்தைப் புகட்டுவார்கள் - ஹேஷா விதானகே

Published By: Digital Desk 4

28 Jul, 2022 | 09:11 PM
image

(நா.தனுஜா)

பாராளுமன்ற உறுப்பினர்கள் மக்களால் கடந்த காலங்களில் நிகழ்த்தப்பட்ட சம்பவங்களிலிருந்து இன்னமும் பாடம் கற்றுக்கொள்ளவில்லை என்றே தோன்றுகிறது.

ஜுலை 9 ஆம் திகதி போன்ற நாள் மீண்டும் வெகுவிரைவில் வரும். அப்போது தம்மீதான அழுத்தத்தைத் தாங்கமுடியாமல் தமது உயிரைப் பணயம்வைத்து முன்னேறிவரும் மக்களை எவராலும் தடுக்கவியலாது.

அதேபோன்று மக்களின் போராட்டத்தை வசைபாடிய சனத் நிஷாந்த போன்ற நபர்களுக்கு மக்கள் சரியான பாடத்தைப் புகட்டுவார்கள் என்று தெரிவித்தார் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் தானாகவே வினையைத் தேடிக்கொண்டுள்ளது - ஹேஷா விதானகே | Virakesari.lk

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித்தலைவர் அலுவலகத்தில் வியாழக்கிழமை (28) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் கூறியதாவது:

பாராளுமன்றத்தில் நேற்று அவசரகாலநிலை பிரகடனத்திற்கு சார்பாக வாக்களித்தவர்கள் இந்நாட்டில் ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைப்பதற்காகக் கைதூக்கியவர்களாவர். அதற்காக 120 பேர் வாக்களித்தனர்.

அதேவேளை நாட்டின் பொருளாதாரத்தையும் மக்களின் இயல்பு வாழ்க்கையையும் ஜனநாயகத்தையும் சீரழிக்கவேண்டாமென 63 பேர் வாக்களித்தனர். தற்போது இவ்விரு வாக்குகள் தொடர்பிலும் மக்களுக்கு சிறந்த புரிதல் இருக்கின்றது.

பாராளுமன்றத்தில் நேற்று முழுவதும் சிரேஷ்ட அமைச்சர்கள் தாங்கள் இழந்த விடயங்கள், தாம் முகங்கொடுத்த அசௌகரியங்கள், தனிப்பட்ட இழப்புக்கள், பொருளாதார அழிவுகள் பற்றியே உரையாற்றினர். அவர்கள் தமக்குரிய பொறுப்பை மறந்துவிட்டுப் பேசினார்கள்.

ஜனநாயக முறையின்படி பாராளுமன்றத்திற்கு வந்தவர்கள், தாம் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதை மறந்து செயற்பட்டதை நேற்று முன்தினம் நேரடியாகக் கண்டோம்.

தமது சொத்துக்கள் சேதமடையும்போது வேதனையுடன் பாராளுமன்றத்தில் குரலெழுப்பிய உறுப்பினர்களால் தற்போது மக்கள் முகங்கொடுத்திருக்கும் நெருக்கடிகளையும் இன்னல்களையும் புரிந்துகொள்ளமுடியவில்லை.

அத்தியாவசியப்பொருட்களைப் பெற்றுக்கொள்வதற்குக்கூட நீண்ட வரிசைகளில் காத்திருக்கவேண்டிய நிலையில் மக்கள் இருக்கின்றனர்.

பாராளுமன்ற உறுப்பினர்கள் மக்களால் கடந்த காலங்களில் நிகழ்த்தப்பட்ட சம்பவங்களிலிருந்து இன்னமும் பாடம் கற்றுக்கொள்ளவில்லை என்றே தோன்றுகிறது.

ஜுலை 9 ஆம் திகதி போன்ற நாள் மீண்டும் வெகுவிரைவில் வரும். அப்போது தம்மீதான அழுத்தத்தைத் தாங்கமுடியாமல் தமது உயிரைப் பணயம்வைத்து முன்னேறிவரும் மக்களை எவராலும் தடுக்கவியலாது. அதேபோன்று மக்களின் போராட்டத்தை வசைபாடிய சனத் நிஷாந்த போன்ற நபர்களுக்கு மக்கள் சரியான பாடத்தைப் புகட்டுவார்கள் என்று தெரிவித்தார்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47