சீனாவில் ஷாங்காய் நகரில் வீதியினை கடக்க துவிச்சக்கரவண்டியில் காத்திருந்த முதியவரை பின்னோக்கி வந்த  வேன் ஒன்று மோதியதில் கீழே விழுந்த முதியவர் மீது வேன் ஏறி இறங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவின் ஷாங்காய் நகரில் முதியவர் ஒருவர் துவிச்சக்கரவண்டியில் வீதியை கடப்பதற்காக வீதி சமிஞ்சை விளக்கின் அருகில் தரித்து நின்றவேளையில்  எதிர்பாராதவிதமாக இவரது அருகாமையில் நின்றிருந்த வேன் ஒன்று பின்னோக்கி நகர்ந்து வந்துள்ளது.

குறித்த வேன் துவிச்சக்கரவண்டியுடன் நின்றிருந்த முதியவர் மீது மோதிவே குறித்த முதியவர் தடுமாறி வீதியில்  வீழ்ந்துள்ளார். இருப்பினும் குறித்த முதியவர் அங்கிருந்து நகரும் முன்னர் குறித்த வேன் அவர் மீது ஏறியுள்ளது. இவ்விபத்தில் படுகாயமடைந்தாலும் குறித்த முதியவர் உயிர் பிழைத்துள்ளதாக கூறப்படுகிறது.

இச் சம்பவமானது கடந்த மாதம்  29 ஆம் திகதி நடந்துள்ள நிலையில் வீதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கமெராவில் பதிவாகியிருந்த குறித்த காட்சிகள் தற்போது வெளியாகி சமூகவலைதளங்களில்  பரவி வருகிறது.

இந்த கோர விபத்தினை ஒரு பெண் ஏற்படுத்தியுள்ள நிலையில் உடனடியாக வாகனத்தில் இருந்து வெளியே வந்து குறித்த முதியவரை மீட்க உதவியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.