இந்தியாவில் 181 மாவட்டங்களில் மீண்டும் கொரோனா தொற்று

Published By: Digital Desk 3

27 Jul, 2022 | 12:55 PM
image

உலகளாவிய ரீதியில் கொரோனா வைரஸ் தொற்று  மீண்டும் அதிகரித்து வருகிறது.

தற்போது அமெரிக்கா, ஜப்பான், பிரான்ஸ், துருக்கி, ஜேர்மனி, இத்தாலி, தென் கொரியா ஆகிய நாடுகளில் தொற்று பரவல் மீண்டும் அதிகரித்த வண்ணம் உள்ளது. 

இந்தியாவில் குறிப்பிட்ட சில மாநிலங்களில் கொரோனா மீண்டும் வேகமாக பரவி வருகிறது. 

அந்த வகையில் நாடு முழுவதும் 181 மாவட்டங்களில் தொற்று பாதிப்பு விகிதம் 10 சதவீதத்திற்கும் மேல் இருப்பது புள்ளி விபரங்களில் தெரிய வந்துள்ளது. 

இதேபோல 107 மாவட்டங்களில் தொற்று பாதிப்பு விகிதம் 5 முதல் 10 சதவீதம் வரை உள்ளது. இதைத்தொடர்ந்து இந்த மாவட்டங்களில் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறு இந்திய மத்திய அரசு சம்பந்தப்பட்ட மாநில அரசுகளை அறிவுறுத்தியுள்ளது.

இதற்கிடையே நாடு முழுவதும் தற்போது தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கையும் மெல்ல அதிகரித்து வருகிறது. 

தினசரி பாதிப்பில் சுமார் 11 சதவீதம் கேரளாவிலும், 10.5 சதவீதம் மகாராஷ்டிரத்திலும், 10.3 சதவீதம் தமிழ்நாட்டிலும் பதிவாகிறது. 6 மாநிலங்களில் தினசரி பாதிப்பு ஆயிரத்தை தாண்டி வருகிறது. 7 மாநிலங்களில் தினசரி பாதிப்பு 500 முதல் 1,000 வரை உள்ளது. 

இதைத்தொடர்ந்து தடுப்பூசி போடும் பணிகளை மேலும் தீவிரப்படுத்துமாறும் மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17
news-image

பாக்கிஸ்தானில் தற்கொலை குண்டுதாக்குதல் - ஐந்து...

2024-03-26 17:42:13
news-image

அமெரிக்காவிற்கு நாடு கடத்தப்படுவதற்கு எதிரான வழக்கு...

2024-03-26 17:06:35
news-image

இலங்கைக்கு வந்துகொண்டிருந்த கப்பலே அமெரிக்காவின் பல்டிமோர்...

2024-03-26 15:02:50