பிலிப்பைன்ஸில் பயங்கர நிலநடுக்கம் ; ஒருவர் பலி

Published By: Digital Desk 3

27 Jul, 2022 | 11:41 AM
image

பிலிப்பைன்ஸில் அப்ரா மாகாணத்தில் இன்று புதன்கிழமை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதோடு, ஒருவர் உயிரிழந்துள்ளார்.

Photo ; Cervantes LGU

இந்த நிலநடுக்கம் தலைநகர் மணிலா உள்ளிட்ட பல பகுதிகளில் உணரப்பட்டது. ரிச்டர் அளவுகோலில் 7.1 ஆக பதிவாகி உள்ளது. 

இந்த நிலநடுக்கத்தால் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கியதால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதியில் தஞ்சம் அடைந்தனர். 

Photo ; Vigan Cathedral's Facebook page

இந்த நிலநடுக்கத்தால் இடிபாடுகளில் சிக்கி 25 வயது இளைஞன் உயிரிழந்ததாக அப்ரா மாகாணத்தின் துணை ஆளுநர் ஜாய் பெர்னோஸ் தெரிவித்துள்ளார்.

மேலும், 44 பேர் காயமடைந்துள்ளனர்.  70 வீடுகள், 20 அரசு கட்டிடங்கள் மற்றும் மூன்று பாலங்கள் சேதமடைந்ததுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Photo ; by Bureau of Fire Protection

பிலிப்பைன்ஸில் 1990-ம் ஆண்டு 7.7 என பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சுமார் 2,000 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 11:11:08
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52
news-image

இந்தோனேசியாவில் வெடித்து சிதறும் எரிமலை ;...

2024-04-18 11:01:39
news-image

முன்னாள் ஜனாதிபதி டுடெர்டேவை சர்வதேச நீதிமன்றத்தில்...

2024-04-17 19:37:05
news-image

தமிழக தேர்தல் நிலவரம் - தந்தி...

2024-04-17 16:09:34
news-image

தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்களின் அனல் பறக்கும்...

2024-04-17 15:18:32
news-image

“என் பெயர் அரவிந்த் கேஜ்ரிவால்... நான்...

2024-04-17 12:10:07
news-image

இஸ்ரேலிய படையினர் ஆக்கிரமித்திருந்த அல்ஸிபா மருத்துவமனைக்குள்...

2024-04-17 11:44:07
news-image

உக்ரைன் யுத்தம் - ரஸ்யா இதுவரை...

2024-04-17 11:08:10
news-image

ஈரானின் அணுஉலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல்...

2024-04-16 15:39:41