மக்களின் அபிலாசைகளுக்கு மதிப்பளித்து அரசாங்கம் தேர்தலை நடத்த வேண்டும் - சம்பிக்க

Published By: Digital Desk 3

26 Jul, 2022 | 04:14 PM
image

(இராஜதுரை ஹஷான்)

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தை நாட்டு மக்கள் ஒருபோதும் ஏற்கமாட்டார்கள். நாட்டு மக்களின் அபிலாசைகளுக்கு மதிப்பளித்து தேர்தலை நடத்த அரசாங்கம் அவதானம் செலுத்த வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

கொழும்பில் செவ்வாய்க்கிழமை (26)  இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக்கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

தான் ஒரு நாமநிர்வாகியான ஜனநாயகவாதி என்பதை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உறுதிப்படுத்தியுள்ளார்.காலி முகத்திடல் போராட்டகாரர்கள் மீது பாதுகாப்பு தரப்பினர் மேற்கொண்ட மிலேட்சத்தனமான தாக்குதலை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நியாயப்படுத்துகிறார்.

மக்களின் ஜனநாயக போராட்டத்தை அதிகாரத்தை கொண்டு அடக்கினால் அதன் எதிர்விளைவு மிக பாரதூரமானதாக அமையும். நாட்டு மக்கள் அரசியல் கட்டமைப்பை முழுமையாக வெறுக்கிறார்கள்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவையும்,அவர் தலைமையிலான அரசாங்கத்தையும் நாட்டு மக்கள் ஒருபோதும் ஏற்கபோவதில்லை.

நாட்டில் அரசியல் ஸ்தீரத்தன்மை நிலையாக பேணப்பட வேண்டுமாயின் அரசாங்கத்தின் மீது மக்கள் நம்பிக்கை கொள்ள வேண்டும்.

ஆகவே தேர்தல் ஒன்றின் ஊடாக சகல பிரச்சினைகளுக்கும் தீர்வு காண முடியும். நாட்டு மக்களின் அபிலாசைக்கு மதிப்பளித்து தேர்தலை நடத்த அரசாங்கம் அவதானம் செலுத்த வேண்டும்.

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண அரசாங்கம் பேச்சளவில் மாத்திரம் கொள்கை திட்டங்களை குறிப்பிடுகிறதே தவிர,செயற்பாட்டு ரீதியில் எதனையும் செயற்படுத்தவில்லை.

எதிர்வரும் காலங்களில் எரிபொருள் கொள்வனவு நிச்சயமற்றது என மத்திய வங்கியின் ஆளுநர் குறிப்பிட்டுள்ளமை உண்மையானதே என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13