நாசரேத்து கிராமத்தில் பெத்தலகேம் எனும் மிகவும் ஏழ்மையான நகரில் மரியாள், ஜோசப் இற்கு இயேசு கிறிஸ்து பிறந்தார். அதுவே உலகெங்கிலும் வாழும் கிறிஸ்தவர்களின் நத்தார் பண்டிகையாக விளங்குகின்றது.

அந்தவகையில் மலையகத்தில் இன்று கிறிஸ்தவர்கள் நத்தார் பண்டிகையை மிக விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். மலையகத்தில் உள்ள கிறிஸ்தவ தேவலாயங்களில் விசேட ஆராதனைகள் மற்றும் கலை விழாக்கள் இடம்பெற்று வருகின்றன.

ஹட்டன் நகரத்தில் உள்ள திருச்சிலுவை தேவலாயத்தில் இன்று நள்ளிரவு 12 மணிக்கு விசேட ஆராதனைகள் இடம்பெற்று அருட் தந்தை லெஸ்லி பெரேரா அவர்களால் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.

இதில் அதிகமான பக்தர்கள் கலந்து கொண்டு தங்களது வழிபாடுகளில் ஈடுப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.