மதுபானசாலைக்கு சென்ற இரு இளைஞர்கள் சிக்கினர்.!

Published By: Robert

07 Nov, 2016 | 09:24 AM
image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட களுவாஞ்சிகுடி பிரதான வீதியில் அமைந்துள்ள மதுபானசாலை ஒன்றில் போலி நாணய தாள்களுடன் மதுபான கொள்வனவுக்கு வந்த இரண்டு பேரை மடக்கிப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாக அதன் உரிமையாளர் தெரிவித்தார்.

நேற்று இடம்பெற்றுள்ள இச்சம்பவம் தொடர்பாக மதுபானசாலை உரிமையாளர் மேலும் தெரியவருவதாவது,

“நீண்ட காலமாக எமது மதுபானசாலையில் போலி நாணய தாள்களை தந்து மதுபானத்தை கொள்வனவு செய்து தலைமறைவாவது வழமை. இவ்வாறு நாங்கள் 20 ஆயிரம் ரூபாய்க்கு மேற்பட்ட போலி நாணய தாள்களை கிழித்து எறிந்துள்ளோம். அதன் பின்னர் இந்த விடயத்தில் நாங்கள் மிகவும் அவதானமாக இருந்தோம்.

வழமைபோன்று வியாபாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் வேளையில் முச்சக்கர வண்டியில் வந்த மூவரில் இரண்டு பேர் அதிலிருந்து இறங்கி வந்து 5 ஆயிரம் ரூபாய் பண நோட் ஒன்றைத் தந்து மதுபானம் கேட்டனர்.  அந்த பண நோட் போலியானது என்ற சந்தேகம் எமக்கு வலுக்கவே அதனைப் பரிசோதித்தோம். அது போலி உறுதியாகியது. நாம் பரிசோதிப்பதை அவதானித்த அந்த மோசடிக் காரர்கள் இருவரும் தப்பி ஓட எத்தனித்தனர். அவர்களை நாம் சாதுரியமாக மடக்கிப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்தோம். முச்சக்கரவண்டியில் இருந்த மூன்றாவது நபர் தப்பி ஓடிவிட்டார்.

பிடிக்கப்பட்ட இருவரும் காத்தான்குடியைச் சோர்ந்த 25 வயது மதிக்கத்தக்கவர்கள். மோசடிக்கார சந்தேக நபர்களிடம் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

-அப்துல் கையூம்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10