'ஆவா குறூப்' சந்தேக நபர்கள் அறுவர் கைது; மூன்று முக்கிய சந்தேக நபர்கள் தலைமறைவு

Published By: Raam

07 Nov, 2016 | 08:25 AM
image

வடக்கில் செயற்படும் பிரபல பாதாள உலகக் குழுவான ஆவா குறூப்புடன் தொடர்புடைய அறுவரை பயங்கரவாத தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் அடங்கிய சிறப்பு பொலிஸ் குழுவினர் கைது செய்துள்ளனர். நேற்றும் நேற்று முன் தினமும் இவர்கள் கைது செய்யப்பட்டதாக சிறப்பு விசாரணைகளுக்கு பொறுப்பான உயர் அதிகாரி ஒருவர் வீரகேசரி இணையதளத்திற்கு தெரிவித்தார்.  நேற்று முன் தினம் நால்வரும் நேற்று இருவரும் இவ்வாறு கைது செய்யப்பட்ட நிலையில் அவர்கள் அறுவரையும் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

நேற்று முன் தினம் யாழின் பல பகுதிகளில் முன்னெடுக்கப்ப்ட்ட சிறப்பு விசாரணைக்கு அமைய அடையாளம் காணப்பட்ட ஆவா குழுவினர் என கருதப்படும் நான்கு பேரை சிறப்பு பொலிஸ் குழு கைதுச் செய்தது. இதனையடுத்து அவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு விசாரணைக்கு அமைவாக உடுவில் பகுதியைச் சேர்ந்த சகோதரர்கள் இருவரை பொலிஸார் கைதுச் செய்துள்ளனர்.

ஆவா குழுவுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் உடுவில் பகுதியில் மேற்படி சகோதரர்கள் இருவரை பயங்கரவாத தடைச்சட்டப்பிரிவினர் கைதுசெய்ததினால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.

யாழ். சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உடுவில் பகுதியில் உள்ள வீடொன்றிற்கு சென்ற பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் உள்ளடங்கிய சிறப்பு பொலிஸ் குழுவினர்  வீட்டில் இருந்த சகோதரர்கள் இருவரை கைதுசெய்துள்ளனர்.

கைது செய்த வேளையில், வீட்டில் இருந்தவர்கள் கூச்சலிட்டு கத்தியதை தொடர்ந்து, தாம் யார் என சிறப்பு விசாரணையாளர்கள் அடையாளப்படுத்தியதுடன் கைதுசெய்த நபர்கள் இருவரையும் அவர்களுக்குச் சொந்தமான ஹயஸ் வாகனத்தினையும் எடுத்துச் சென்றுள்ளனர்.

சம்பவத்தினை அறிந்த இவர்களின் சகோதரன் யாழ்.மருதனார்மடம் பகுதியில் நின்ற போது , அப்பகுதியில் வந்த சிறப்பு ஹயஸ் வாகனத்தினை மறித்து பிரச்சினையில் ஈடுபட்ட போது அந்தப்பகுதியில் உள்ள மக்கள் திரண்டு சம்பவத்தினைப் பார்த்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு வந்த சுன்னாகம் பொலிஸார் கைதுசெய்யப்பட்ட இளைஞர்கள் இருவரின் சகோதரனை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச்சென்றுள்ளனர்.

பயங்கரவாத தடைச்சட்டப்பிரிவினரால் கைதுசெய்யப்பட்ட இந்திரகுமார் கபில் மற்றும் இந்திரகுமார் விதுசன் ஆகிய இருவரையும் ஹயல் வாகனத்தினையும் சிறப்பு பொலிஸ் குழுவினர் மேலதிக விசாரணைகளுக்காக யாழ். பொலிஸ் நிலையம் நோக்கி கொண்டு சென்றுள்ளனர்.

இதனிடையே கடந்த ஒரு வாரத்துக்கு அதிகமாக இராணுவ புலனயவாளர்கள் மற்றும் தேசிய உளவுப் பிரிவினரால் சேகரிக்கப்ப்ட்ட ஆவா குழு தொடர்பிலான அறிக்கை சிறப்பு விசாரணைகளை முன்னெடுக்கும் 9 பொலிஸ் குழுக்களின் பிரதானிக்கு கையளிக்கப்பட்டுள்ளது. அதன்படி அந்த அறிக்கைகள் ஊடாக ஆவா குழுவுடன் தொடர்புடைய பலர் துல்லியமாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர்களை அடுத்துவரும் நாட்களில் கைதுச் செய்ய முடியும் என தாம் நம்புவதாகவும் விசாரணைகளுக்கு பொறுப்பான உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.

குறிப்பாக ஆவா குழுவினர் தற்போது வழி நடத்துவதாக நம்பப்படும் சன்னா, கண்னா உள்ளிட்ட மூன்று பேர் தொடர்பில் மிக முக்கியமான தகவல்கள் பொலிஸாருக்கு கிடைத்துள்ள நிலையில், அவர்கள் தலைமறைவாகியுள்ளதாகவும் கைதுச் செய்வதற்கான நடவடிக்கைகள் அனைத்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் வட மாகாணத்தின் உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.

இவ்வாறு தலைமறைவகையுள்ள மூவரும் முல்லை தீவு பகுதியில் இருக்கலாம் என நம்பகரமான தகவல்கள் பொலிஸாருக்கு கிடைத்துள்ள நிலையில் அது தொடர்பிலும் பொலிஸாரின் அவதானம் திரும்பியுள்ளது. மேலதிக விசாரணைகளை பயங்கரவாத புலனாய்வுப் பிரிவின் விசாரணையாளர்களை உள்ளடக்கிய சிறப்பு பொலிஸ் குழுவினர் முன்னெடுத்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30