பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட்டில் பலமான நிலையில் இலங்கை

25 Jul, 2022 | 09:25 PM
image

பாகிஸ்தானுக்கு எதிராக காலி சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் 2ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை பலம்வாய்ந்த நிலையில் இருக்கிறது.

இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அதன் முதல இன்னிங்ஸில் 378 ஓட்டங்களைப் பெற்றது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிவரும் பாகிஸ்தான் 2ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் அதன் முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட்களை இழந்து 191 ஓட்டங்களைப் பெற்று இக்கட்டான நிலையில் இருக்கின்றது.

போட்டியின் இரண்டாம் நாளான நேற்று காலை தனது முதல் இன்னிங்ஸை 6 விக்கெட் இழப்புக்கு 315 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்த இலங்கை, மேலதிகமாக 63 ஓட்டங்களைப் பெற்றதுடன் எஞ்சிய 4 விக்கெட்களை இழந்தது.

தங்களது துடுப்பாட்டத்தைத் தொடர்ந்த அறிமுக வீரர் துனித் வெல்லாலகே, நிரோஷன் திக்வெல்ல ஆகிய இருவரும் நீண்ட நேரம் தாக்குப் பிடிக்க முடியாமல் ஆட்டமிழந்தனர்.

நிரோஷன் திக்வெல்ல 51 ஓட்டங்களைப் பெற்றதுடன் பின்வரிசையில் ரமேஷ் மெண்டிஸ் 35 ஓட்டங்களைப் பெற்றார்.

பாகிஸ்தான் பந்துவீச்சில் நஸீம் ஷா 58 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் யாசிர் ஷா 83 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் மொஹமத் நவாஸ் 80 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடும் பாகிஸ்தான் ஆரம்பத்தில் தடுமாறிய போதிலும் இளம் வீரர் அகா சல்மான் பெற்ற அரைச் சதத்தின் உதவியுடன் ஓரளவு கௌரவமான நிலையை அடைந்தது.

முதல் டெஸ்டில் ஆட்டமிழக்காமல் சதம் குவித்து பாகிஸ்தானின் வெற்றியில் முக்கிய பங்காற்றி ஆட்டநாயகனான அப்துல்லா ஷபிக் ஓட்டம் பெறாமல் ஆட்டமிழந்ததுடன் அணித் தலைவர் பாபர் அஸாம் 16 ஓட்டங்களுடன் வெளியேறினார்.

தொடர்ந்து சீரான இடைவெளிகளில் விக்கெட்களை இழந்த பாகிஸ்தான் மிகவும் இக்கட்டான நிலையில் (145 - 6 விக்.) இருந்தது.

ஆனால், அகா சல்மான், யாசிர் ஷா ஆகிய இருவரும் பொறுமையுடன் துடுப்பெடுத்தாடி 7ஆவது விக்கெட்டில் 46 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை ஓரளவு கௌரவமான நிலைக்கு இட்டுச்சென்றனர். 

அகா சல்மான் தனது அரை சதத்தைப் பூர்த்தி செய்து 62 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது ஆட்டமிழந்தார்.

அவரை விட இமாம் உல் ஹக் 32 ஓட்டங்களையும் மொஹமத் ரிஸ்வான் 24 ஓட்டங்களையும் பவாத் அலாம் 24 ஓட்டங்களையும் பெற்றனர்.

இலங்கை பந்துவீச்சில் ரமேஷ் மெண்டிஸ் 42 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ப்ரபாத் ஜயசூரிய 59 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35
news-image

ஸ்ரீ லயன்ஸ் அழைப்பு வலைபந்தாட்டப் போட்டியில்...

2024-03-26 19:25:58
news-image

பூட்டானை வீழ்த்தியது இலங்கை : கால்பந்தாட்டத்திலிருந்து...

2024-03-26 16:48:31
news-image

சீன கால்பந்தாட்டச் சங்கத்தின் முன்னாள் தலைவருக்கு...

2024-03-26 11:53:22