சாதாரண தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் மீள ஆரம்பம்

Published By: Digital Desk 5

25 Jul, 2022 | 12:31 PM
image

(எம்.வை.எம்.சியாம்)

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டு இருந்த க.பொ.த.சாதாரண தரப் பரீட்சையின் இரண்டாம் கட்ட விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் மீள ஆரம்பிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பரீட்சைகள் திணைக்களத்தின் ஆணையாளர் எல்.எம்.டி. தர்மசேன கருத்து தெரிவிக்கையில்,

பொருளாதார நெருக்கடி காரணமாக எரிபொருள் தட்டுப்பாடு உக்கிரமடைந்து இருந்தது.

அதன் காரணமாக க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையின் இரண்டாம் கட்ட மதிப்பீட்டு பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டு இருந்தது.

இந்நிலையில், தற்போது விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் மீள ஆரம்பதற்கு தீர்மானிக்கப்பட்டு உள்ளது.

எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 6 ஆம் திகதி முதல் குறித்த விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ளது. இருப்பினும் முதற்கட்ட விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது  என்றார்.

இருப்பினும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கருத்து தெரிவிக்கையில்,

தற்காலிகமாக நிறுத்தப்பட்டு இருந்த க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையின் இரண்டாம் கட்ட மதீப்பிட்டு பணிகளை ஆரம்பிப்பதற்கு முன்னர் விடைத்தாள் பணிகளில் ஈடுபட உள்ள ஆசிரியர்களுக்கு  எரிபொருளை பெற்றுக்கொடுக்க முறையான நடைமுறையினை பின்பற்றுமாறு கோரிக்கை விடுப்பதாக அவர் குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவை தாமதம்

2024-03-29 12:00:05
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20