உமிழ்நீர் மருத்துவம்!

Published By: Digital Desk 5

24 Jul, 2022 | 04:48 PM
image

உடலில் முக்கிய சுரப்பிகளில் ஒன்று உமிழ்நீர். வாயை எப்போதும் ஈரத் தன்மையுடன் வைத்திருக்கும். உண்ணும் உணவு நன்றாக செரிக்க உதவும். ஒரு நாளைக்கு, ஒரு மனிதனின் வாயில், 1-2 லிட்டர் வரை உமிழ்நீர் சுரக்கும். இதில், 99 சதவீதம் தண்ணீர் மற்றும் சோடியம், பொட்டாஷியம் பைகார்பனேட் என்ற இரசாயன சேர்மங்கள் இருக்கின்றன.

உமிழ்நீரின் வேலை...

- உணவை முறைப்படி செரிக்கச் செய்யும்.

- உடலில் பக்டீரியா மற்றும் பூஞ்சைகளை கட்டுப்படுத்தும்.

உணவு நன்றாக செரிப்பதை தான், ‘நொறுங்கத் தின்றால் நூறு வயது’ என பொன்மொழியாக கூறினர் பழந்தமிழர். இதன் பொருள், உணவை நன்றாக மென்று, உமிழ்நீர் பெருக விழுங்கினால், நீண்ட நாட்கள் நலமாக வாழலாம் என்பதாகும்.

புளிப்பு, இனிப்பு சுவைகளை உணர்ந்தால், உமிழ்நீர் சுரக்கும். இதனால்தான், முதல் உணவாக இனிப்பை சாப்பிட வைக்கும் வழக்கம் தமிழர்களிடம் உள்ளது.

காரத்தன்மை கொண்டது உமிழ்நீர். அதிக ‘என்ஸைம்’ கொண்டது. இதில் அன்டிபயோடிக் அதிகம் உள்ளதால், நோய் எதிர்ப்பு சக்தியை தருகிறது. 

வழக்கமான உணவுக்கு 30 நிமிடங்கள் முன்னரும், உண்டு 30 நிமிடங்களுக்கு பின்னரும் வெல்லம், கருப்பட்டி போன்ற ஏதாவது ஒரு இனிப்பை உண்டால் உமிழ்நீர் நன்கு சுரக்கும்.

உமிழ்நீர் சுரப்பு குறைந்தால்...

- நாவில் வறட்சி, ஈறுகளில் வெடிப்பு போன்ற பாதிப்புகள் ஏற்படலாம்.

- நீரிழிவு, மன அழுத்தம் போன்றவை உண்டாகலாம்.

நீரிழிவு நோய்க்கு காரணம், உடலில் இன்சுலின் சுரப்பு குறைவதாகும். உடலின் முக்கிய உள் உறுப்பான கணையத்திலிருந்து இன்சுலினைச் சுரக்கத் தூண்டுவது, உணவுடன் செல்லும் உமிழ்நீர் தான்.

விழுங்கும் உணவில் உமிழ்நீர் குறைவாக இருந்தால், இன்சுலின் சரியாக சுரப்பதில்லை. இதனால், உணவில் உள்ள குளுக்கோஸ், வேதிமாற்றம் அடையாமல் சர்க்கரையாகவே இரத்தத்தில் தங்கிவிடும். நாளடைவில் அதுவே, நீரிழிவு நோயாக மாறுகின்றது.

நீரிழிவு எனும் நோயை, உமிழ்நீர் எனும் மருந்து கொண்டு அழிக்கலாம். உணவை நன்றாக மென்று விழுங்க பழகுங்கள். அதுவே ஆரோக்கியத்தின் முதல்படி.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்