நடுவீதியில் மாரடைப்பால் துடிதுடித்த பெண்ணை காப்பாற்ற பொலிஸார் வைத்தியர்களாக மாறிய சம்பவம் அமெரிக்காவில் இடம் பெற்றுள்ளது.

அமெரிக்காவின் நியூயோர்கில்  தம்பதியொன்று  தங்களின் வீட்டிற்கு இரவில்  திரும்பிக் கொண்டிருந்த வேளையில் எதிர்பாராதவிதமாக காரில் இருந்த பெண்ணுக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.

இதனால் காரணமாக பதற்றமடைந்த அப்பெண்ணின் கணவர் காரை செலுத்த முடியாமல் வீதியின் ஓரத்தில் நிறுத்தியுள்ளார்.

பின்னர் உடனடியாக அவர் நியூயோர்க் நகர பொலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவலறிந்த பொலிஸார் உடனடியாக அவசர சிகிச்சை பிரிவுக்கும் ஆம்புலன்ஸ் சேவைக்கும் தகவல் கொடுத்துள்ளனர்.

அதைத் தொடர்ந்து சம்பவயிடத்திற்கு விரைந்துள்ள பொலிஸார் ஆம்புலன்ஸ் வண்டி வர தாமதமானதால் வலியால் துடிதுடித்த பெண்ணை  காரிலிருந்து கீழே இறக்கி அப்பெண்ணிற்கு முதலுதவி அளித்துள்ளனர்.

பொலிஸார் அளித்த முதலுதவியால் அப்பெண் மரணத்தில் இருந்து மீண்டுள்ளார். பின்னர் குறித்த பெண்ணை மேலதிக சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

தற்போது அப்பெண் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும், பொலிஸார் மட்டும் தகுந்த நேரத்தில் உதவிக்கு வரவில்லை என்றால் என் மனைவிக்கு என்ன நடந்திருக்கும் என்று தன்னால் கூறமுடியாது என அப்பெண்ணின் கணவர் தெரிவித்துள்ளார்.