போராட்டகார்கள் மீதான தாக்குதல் மனிதாபிமானமற்ற செயல் ; கரு ஜயசூரிய

Published By: Digital Desk 4

22 Jul, 2022 | 10:04 PM
image

(எம்.வை.எம்.சியாம்)

இலங்கை அரசியலின் முக்கியமான திருப்புமுனையாக அமைந்திருந்த காலி முகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான பாதுகாப்பு தரப்பினர் கொண்டு மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் மனிதாபிமானமற்ற  செயல். மேலும்  ஆட்சியாளர்கள் நாகரீகமான முறையில் நெருக்கடிகளை தீர்ப்பதற்கு விரும்பவில்லை என்பதே இதன் ஊடாக புலப்படுகிறது என்று நியாயமான சமூகத்திற்கான தேசிய இயக்கத்தின் தலைவருமான முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

முறையான தரவுகள் இல்லை : மிகவும் ஆபத்தான நிலையென்கிறார் கரு ஜயசூரிய |  Virakesari.lk

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்.

ஜனநாயக மிக்க சமூகத்தில் மாற்று கருத்து உடையவர்களுக்கு தனது கருத்துகளை தெரிவிப்பதற்கும் அமைதியான முறையில் எதிர்ப்பினை தெரிவிப்பதற்கான உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்.

பல்வேறு சமூக குழுக்களின் பொதுவான அபிலாசைகள் ஒன்று சேரந்திருந்தமையால் காலி முகத்திடல் போராட்டமானது உயிர்ப்புடன் செயல்பட்டு வந்தது.

இந்நிலையில், சுதந்திரத்திற்கு பின் இலங்கை வரலாற்றில் வரையறையற்ற அதிகாரங்களை தன் வசம் வைத்திருந்த ஆட்சியாளர் நாட்டை விட்டு தப்பி ஓடுவதற்கான சூழ்நிலையில் ஏற்படுத்துவதற்கு இந்தப் போராட்டமும், இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்களின் ஒருமித்த கருத்தும் காரணமாக அமைந்நிருத்தை ஆட்சியாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

போராட்டகாரர்கள் கைப்பற்றி இருந்த ஜனாதிபதி செயலகத்தில் இருந்து நேற்று வெளியேறுவதற்கு அவர்கள் தயார் நிலையில் இருந்ததோடு இது போன்ற சூழ்நிலையில் மேற்கொள்ளப்பட்ட மனிதாபிமானற்ற இந்த தாக்குதலை யாராலும் நியாயப்படுத்த முடியாது.

எமது நாட்டின் அரசியல் சமூகம் நாகரீக முறையில் நெருக்கடிகளையும் கருத்து வேறுபாடுகளையும் தீர்ப்பதற்கு விரும்பவில்லை என்பது இதன் ஊடாக புலப்படுகிறது. இதனை அகற்றுவது சமூகத்தின் கடமையாக அமைந்திருக்கும் அதேவேளை அதற்கான தலைமைத்துவத்தை நாட்டின் அரசியல் தரப்பு மேற்கொள்ள வேண்டும்.

இக்கட்டான சூழ்நிலையில் இருந்து நாட்டை மீட்டெடுக்க அனைத்து இனக்குழுக்களும் கொள்கை உறுதியுடன் முன்வந்து வன்முறைகளுக்கு இடமளிக்காமல் இருப்பதற்கான சூழ்நிலையை உருவாக்க வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:49:05
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47