நாட்டு மக்களுக்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் - பிரதமர் தினேஷ் குணவர்தன

Published By: Digital Desk 3

22 Jul, 2022 | 03:03 PM
image

(இராஜதுரை ஹஷான்)

நாட்டு மக்களுக்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவோம். ஜனநாயகத்தை பாதுகாக்க சட்டம் முழுமையாக செயற்படுத்தப்படும். ஜனநாயகத்திற்கு முரணாக எவராலும் செயற்பட முடியாது என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் இன்றைய தினம் பிரதமராக பதவி பிரமாணம் செய்துக்கொண்டதை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

சமூக கட்டமைப்பில் காணப்படு;ம் அடிப்படை பிரச்சினைகளுக்கு நட்பு நாடுகள் மற்றும் சர்வதேச நிறுவனங்களின் ஆதரவுடன் தீர்வு காண அரசாங்கம் உரிய நடவடிக்கையினை மேற்கொள்ளப்பட்டுள்ளது. எரிபொருள்,எரிவாயு ஆகிய சேவை கட்டமைப்பு சிறந்த முறையில் விநியோகிக்கப்படும்.

நாட்டு மக்களுக்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவோம். பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு கண்டால் சமூக கட்டமைப்பில் காணப்படும் ஏனைய பிரச்சினைகள் இயல்காகவே இல்லாமல் போகும்.

அரசியல் ரீதியில் மாறுப்பட்ட கொள்கை காணப்பட்டாலும்,நாட்டுக்கான ஒன்றினைந்துள்ளோம். நாட்டுக்காகவும் அர்ப்பணிப்புடன் செயற்படுவோம்.ஜனநாயகத்தை உறுதிப்படுத்த சட்டத்தை முறையாக செயற்படுத்துவோம்.

நாட்டு மக்கள் எதிர்பார்த்த அரசியல் மற்றும் சமூக மாற்றம் நிச்சயம் ஏற்படுத்தப்படும்.ஜனநாயகத்திற்கு முரணாக எவரும் செயற்பட இடமளிக்க முடியாது.ஒன்றினைந்து செயற்பட சகல அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38