பீட்ரூட் பக்கோடா

Published By: Digital Desk 5

22 Jul, 2022 | 04:33 PM
image

தேவையான பொருட்கள்

பீட்ரூட் - 2 (துருவியது)

இஞ்சி,வெ.பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்

கடலை மாவு -  3 டேபிள் ஸ்பூன்

அரிசி மாவு -  2 டேபிள் ஸ்பூன்

சோள மாவு -  1 டேபிள் ஸ்பூன்

மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்

பெரிய வெங்காயம் -  2 (பொடியாக நறுக்கியது)

கொத்தமல்லி -  சிறிது (நறுக்கியது)

உப்பு -  தேவையான அளவு

எண்ணெய் -  தேவையான அளவு

செய்முறை

முதலில் ஒரு பௌலில் எண்ணெயை தவிர்த்து அனைத்து பொருட்களையும் சேர்த்து, தண்ணீர் ஊற்றி பக்கோடா பதத்துக்கு பிசைந்து கொள்ள வேண்டும். 

பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும். 

பின்பு அதில் பிசைந்து வைத்துள்ள கலவையை சிறிது சிறிதாக எடுத்து, எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், பீட்ரூட் பக்கோடா ரெடி!

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்