தென்னாபிரிக்க விடு­தியில் உயி­ரி­ழந்த 21 சிறு­வர்­களின் இரத்­தத்தில் மர்ம இர­சா­யனம்

Published By: Vishnu

22 Jul, 2022 | 04:47 PM
image

தென் ஆபி­ரிக்­காவின் மது­பான விடு­தி­யான்றில் உயி­ரி­ழந்து காணப்­பட்ட 21 சிறு­வர்­களின் இரத்­தத்தில் மர்­ம­மான இர­சா­யனப் பொருள் கலந்­தி­ருந்­தமை கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்­ள­தாக அதி­கா­ரிகள் தெரி­வித்­துள்­ளனர்.

தென் ஆபி­ரிக்­காவின் ஈஸ்டர்ன் கேப் மாகா­ணத்தின் கிழக்கு லண்டன் நக­ரி­லுள்ள மது­பான விடு­தி­யொன்றில் கடந்த 26 ஆம் திகதி 21 சிறு­வர்கள் மர்­ம­மாக உயி­ரி­ழந்து காணப்­பட்­டனர். இவர்கள் 13 முதல் 17 வயது வரை­யான பாட­சாலை மாண­வர்­க­ளாவர். 

இம்­மா­ண­வர்­களின் மரணம் பெரும் பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­யது. சன­நெ­ரி­சலில் சிக்கி இவர்கள் உயி­ரி­ழந்­தி­ருக்­கலாம் என முதலில் கரு­தப்­பட்­டது. எனினும், சன­நெ­ரிசல் எதுவும் ஏற்­ப­ட­வில்லை என்­பது பின்னர் தெரி­ய­வந்­தது. அவர்­களின் உடல்­களில் காயம் எதுவும் காணப்­ப­ட­வில்லை. 

ஒன்­றாகக் கூடி உரை­யாடிக் கொண்­டி­ருந்த நிலையில் அல்­லது நட­ன­மாடிக் கொண்­டி­ருந்த நிலையில் திடீ­ரென தரையில் வீழ்ந்து உயி­ரி­ழந்­த­வர்­களைப் போன்று அவர்கள் காணப்­பட்­டனர் என அதி­கா­ரிகள் தெரி­வித்­தி­ருந்­தனர். 

தென் ஆபி­ரிக்­காவில் 18 வய­துக்கு குறைந்­த­வர்கள் மது அருந்த தடை விதிக்­கப்­பட்­டுள்­ளது. எனினும், இந்த மது­பான விடுதி, சிறு­வர்­க­ளுக்கு மது விநி­யோ­கித்து வந்­த­தாக செய்­திகள் வெளி­யா­கி­யி­ருந்­தன.

மேற்­படி பாட­சாலை பரீட்சை நிறைவைக் கொண்­டாட்­டங்கள் நடை­பெற்றுக் கொண்­டி­ருந்த காலத்தில் மேற்­படி மாண­வர்கள் குறித்த மது­பான விடு­தியில் விருந்­தொன்­றுக்­காக சென்­றி­ருந்­தனர் எனக் கூறப்­பட்­டது.

இம்­மா­ண­வர்­களின் மர­ணங்­க­ளுக்­கான கார­ணத்தைக் கண்­ட­றி­வ­தற்­கான தீவிர முயற்­சி­களில் அதி­க­ரிகள் ஈடு­பட்­டுள்­ளனர்.

இந்­நி­லையில், மேற்­படி மாண­வர்கள் 21 பேரி­னதும் இரத்­தத்தில் மெதனோல் எனும் இர­சா­யனப் பொருள் காணப்­பட்­ட­தாக  ஈஸ்டர்ட் கேப் மாகாண பிரதி சுகா­தார பணிப்­பா­ள­ரான வைத்­தி­யர் லிதா மதி­வானே கூறி­யுள்ளார்.  எனினும் மர­ணத்தை ஏற்படுத்தக்கூடியதாக மேற்படி மெதனோல் அளவு இருந்ததா என்பதை அறிவதற்கு ஆய்வுகள் நடைபெறுவதாக அவர் கூறியுள்ளார்.

இம்மாணவர்களின் இரத்தத்தில் எவ்வாறு மெதனோல் சேர்ந்தது என்பது தெரியவில்லை எனவும் அவர் கூறினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52