மேடையிலிருந்து திடீரென பாதுகாவலர்களால் வெளியேற்றப்பட்ட டிரம்ப் : அமெரிக்காவில் பரபரப்பு சம்பவம் (காணொளி இணைப்பு)

Published By: MD.Lucias

06 Nov, 2016 | 11:12 AM
image

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சியின் வேட்பாளராக போட்டியிடும் டொனால்ட் டிரம்ப் நெவடா நகரில் இடம்பெற்ற பிரசாரத்தில் உரை நிகழ்த்திக்கொண்டிருந்த போது, கூட்டத்திலிருந்த மர்ம நபர் ஒருவர், டிரம்ப் மீது தாக்குதல் நடத்த முயற்சி செய்துள்ளார். உடனே சுதாரித்த அவரது பாதுகாவலர்கள் டிரம்பை பாதுகாப்பாக அழைத்துச் சென்றுள்ளனர். இதனால் குறித்தப் பகுதியில் பதற்றநிலை ஏற்பட்டது.  

தனது ஒரு கையெழுத்தால் ஒரு நாட்டின் தலைவிதியையே மாற்றும் வலிமை கொண்டது அமெரிக்க ஜனாதிபதியின் கையெழுத்து. அந்த ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பு எப்போதும் இல்லாதளவுக்கு இம் முறை மிகவும் பரபரப்புக்கும், எதிர்பார்ப்புக்கும் உள்ளாகியுள்ளது. 

முன்பு அமெரிக்க ஜனாதிபதிகளாக இருந்தவர்கள் தங்கள் பதவிக் காலத்தில்தான் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியுள்ளனர். 

ஆனால், இப்போது, ஜனாதிபதி பதவிக்குப் போட்டியிடும் வேட்பாளர்கள் இருவருமே

குற்றச்சாட்டுகளுடனும், சர்ச்சைகளுடனும்தான் தேர்தலையே சந்திக்கின்றனர்.

இந்நிலையில்  அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சியின் வேட்பாளராக போட்டியிடும் டொனால்ட் டிரம்ப், நெவடா மாநிலம் ரெனோ நகரில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் நேற்றிரவு உரையாற்றிகொண்டிருந்தார். 

இதன்போது, திடீரென்று கூட்டத்திலிருந்த மர்ம நபர் ஒருவர் டிரம்ப் மீது தாக்குதல் நடத்த பாய்ந்துள்ளார். 

உடனே சுதாரித்த அவரது பாதுகாவலர்கள் டிரம்பின் உடலை கேடயம்போல் மறைத்தபடி, அவரை மேடைக்கு பின்புறமாக அழைத்து சென்றனர்.

அதற்குள், மேடைக்கு எதிரே இருந்த மர்ம நபரை உள்ளூர் பொலிஸார் கைது செய்து அழைத்து சென்றனர். 

டிரம்பை கொல்லவதற்காகவே அந்த மப்ம நபர் துப்பாக்கியுடன் பிரசார கூட்டத்துக்கு வந்துள்ளதாக பொலிஸ் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

மர்ம நபர் கைது செய்யப்பட்டு வேனில் ஏற்றி சென்ற பின்னர், வாய்நிறைய சிரிப்புடன் மீண்டும் மேடையில் தோன்றிய டொனால்ட் டிரம்ப் தனது உயிரை பாதுகாத்தமைக்காக ரகசிய பொலிஸாருக்கு நன்றி தெரிவித்துவிட்டு தனது பேச்சை தொடர்ந்தார்.

டிரம்ப்பை கொல்லும் நோக்கத்தில் வந்த அந்த மர்ம நபர் யார்? இந்த நோக்கத்தின் பின்னணி என்ன? என்பது தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் முடிவுகளை அந்நாட்டு மக்கள் மட்டுமல்லாது உலகமே ஆவலுடன் எதிர்ப்பார்த்து காத்திருக்கும் நிலையில், இச்சம்பவம் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. 

சில நிமிடங்கள் தாமதித்திருந்தாலும் அடுத்த சில நிமிடங்களில் உலக அரசியல் எப்படி வேண்டுமானாலும் மாறிப் போய் இருக்கலாம்.

  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52
news-image

இந்தோனேசியாவில் வெடித்து சிதறும் எரிமலை ;...

2024-04-18 11:01:39
news-image

முன்னாள் ஜனாதிபதி டுடெர்டேவை சர்வதேச நீதிமன்றத்தில்...

2024-04-17 19:37:05
news-image

தமிழக தேர்தல் நிலவரம் - தந்தி...

2024-04-17 16:09:34
news-image

தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்களின் அனல் பறக்கும்...

2024-04-17 15:18:32
news-image

“என் பெயர் அரவிந்த் கேஜ்ரிவால்... நான்...

2024-04-17 12:10:07
news-image

இஸ்ரேலிய படையினர் ஆக்கிரமித்திருந்த அல்ஸிபா மருத்துவமனைக்குள்...

2024-04-17 11:44:07
news-image

உக்ரைன் யுத்தம் - ரஸ்யா இதுவரை...

2024-04-17 11:08:10