கருணைக்கொலை செய்யப்பட்ட உலகின் மிக வயதான பாண்டா கரடி

Published By: Digital Desk 3

22 Jul, 2022 | 10:16 AM
image

சிறைப்பிடிக்கப்பட்ட உலகின் மிக வயதான ஆண் பாண்டா கரடி ஒன்று ஹொங்கொங்கின் உயிரியல் பூங்காவில் கருணைக்கொலை செய்யப்பட்டிருக்கிறது.

சிறைப்பிடிக்கப்பட்ட உலகின் மிக வயதான ஆண் பாண்டா கரடி ஒன்று ஹொங்கொங்கில் உள்ள ஓஷன் பார்க் என்ற பொழுதுபோக்கு பூங்காவில் நேற்று (22) கருணைக்கொலை செய்யப்பட்டிருக்கிறது. 

An An என்று அழைக்கப்படும் இந்த பாண்டா கரடி, அதனுடைய 35 வயதில் கருணைக்கொலை செய்யப்பட்டிருக்கிறது. 35 வயது என்பது ஒரு மனிதன் 105 வயது வரை வாழ்ந்ததற்குச் சமம் என்கிறார்கள். 

கடந்த சில வாரங்களாக பாண்டாவின் உடல்நிலை மிகவும் மோசமடைந்து வந்ததாலும், திட உணவை முழுவதுமாக நிறுத்தி, வெறும் தண்ணீர் மட்டுமே எடுத்துக்கொண்டதாலும், கருணைக்கொலை செய்யப்பட்டதாக ஓஷன் பார்க் அதிகாரிகள் கூறுகின்றனர். 

பூங்காவைச் சேர்ந்த கால்நடை வைத்தியர்கள், மற்றும் பாண்டா கரடிக்கான சீன பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி மையத்துடன் கலந்தாலோசித்துதான் இந்த கருணைக்கொலை செய்யும் முடிவை எடுத்ததாகத் தெருவிக்கின்றனர்.

இந்த பாண்டா கரடி 1999-ம் ஆண்டு சீனாவின் மத்திய அரசால் ஹாங்காங்கிற்கு பரிசாக வழங்கப்பட்டிருக்கிறது. மனதைக் கவரும் தருணங்களையும், பல அன்பான நினைவுகளையும் எங்களுக்கு இந்த பாண்டா கரடி கொடுத்திருக்கிறது.

அதன் புத்திசாலித்தனத்தையும், விளையாட்டுத்தனத்தையும் நாங்கள் மிகவும் மிஸ் செய்வோம் என ஓஷன் பார்க் கார்ப்பரேஷனின் தலைவர் பாலோ பாங் (Paolo Pong ) கூறியிருக்கிறார். 

அந்தப் பூங்காவின் அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் பலரும் வருத்தத்தையும், இரங்கலையும் பாண்டா கரடிக்கு தெரிவித்து வருகின்றனர். பொதுவாக பாண்டா கரடிகளை தேசிய அடையாளமாக சீனர்கள் கருதி வருகின்றனர். 

இந்நிலையில் அழிந்து வரும் பாண்டா கரடிகளை பாதுகாக்க சீன அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு பாண்டா கரடிகளை அழிந்து வரும் உயிரினங்கள் பட்டியலில் சேர்த்திருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல்...

2024-04-16 15:39:41
news-image

டென்மார்க்கில் வரலாற்றுச் சிறப்புமிக்க பங்குச் சந்தை...

2024-04-16 16:56:21
news-image

வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கு? -...

2024-04-16 14:27:38
news-image

பெருமளவு சிறுவர்களுக்கு சத்திரசிகிச்சை செய்தேன் -...

2024-04-16 11:40:44
news-image

பாஜக தேர்தல் அறிக்கையில் கச்சத்தீவு விவகாரம்...

2024-04-16 10:42:45
news-image

இந்தியாவில் 3-வது பெரிய கட்சியாகிறது திமுக:...

2024-04-16 10:39:10
news-image

சிட்னி தேவாலயத்தில் இடம்பெற்றது பயங்கரவாத தாக்குதல்...

2024-04-16 10:30:18
news-image

சிட்னி தேவாலயத்தில் கத்திக்குத்து சம்பவத்தை தொடர்ந்து...

2024-04-15 17:57:13
news-image

சிட்னியில் மீண்டும் வன்முறை - கிறிஸ்தவ...

2024-04-15 16:42:28
news-image

இந்திய மக்களவை தேர்தல் 2024 |...

2024-04-15 15:53:42
news-image

நாடாளுமன்றத்தில் பாலியல் வன்முறைக்குள்ளான பெண் -...

2024-04-15 15:52:39
news-image

அமெரிக்காவைத் தொடர்ந்து கனடாவிலும் இந்திய மாணவர்...

2024-04-15 13:26:08