புதிய அமைச்சரவை நாளை புதிய ஜனாதிபதி முன்னிலையில் பதவி ஏற்கும்

Published By: Digital Desk 4

21 Jul, 2022 | 10:19 PM
image

(எம்.மனோசித்ரா)

சர்வகட்சி அரசாங்கம் ஸ்தாபிக்கப்படும் வரை தற்காலிகமாக புதிய அமைச்சரவை நாளை வெள்ளிக்கிழமை பதவியேற்கவுள்ளது. ஏற்கனவே காணப்பட்ட அமைச்சுப்பதவிகளை அமைச்சர்களே நாளை புதிய ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்கவுள்ளனர்.

Articles Tagged Under: அமைச்சரவை | Virakesari.lk

அதற்கமைய கொழும்பு - 7 , பிளவர் வீதியில் அமைந்துள்ள பிரதமர் அலுவலகத்தில் அமைச்சர்கள் பதவியேற்கும் நிகழ்வு இடம்பெறவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இம்முறை பிரதமராக தினேஷ் குணவர்தன நியமிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சர்வகட்சி அரசாங்கம் அமைப்பதற்கு பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சிகளினதும் ஒத்துழைப்பினை கோருவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவித்திருக்கின்றார்.

எனினும் எந்தவொரு கட்சியும் இது குறித்து ஸ்திரமான தீர்மானமொன்றை அறிவிக்கவில்லை. எனினும் குறிப்பிட்ட கால வரையறைக்கு உட்பட்ட இடைக்கால அரசாங்கம் அமைக்கப்படுமாயின் அதற்கு ஒத்துழைப்பு வழங்குது குறித்து ஆராய முடியும் என்று தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க நாளை ஊடகவியலாளர் மாநாட்டில் அறிவித்தார்.

சர்வகட்சி அரசாங்கத்தில் பங்கேற்பது குறித்து எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச எந்த கருத்தினையும் தெரிவிக்காத போதிலும் , நேற்றைய தினம் ஜனாதிபதியுடன் இடம்பெற்ற சந்திப்பு தொடர்பில் டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர் , ''அரசியல் சந்தர்ப்பவாதிகள் நாட்டின் தேசிய வளங்களை வீணடிப்பதற்கு இடமளிக்கும் வகையில் பெருமளவான அமைச்சுப்பதவிகளை வழங்குவதற்குப் பதிலாக,  தேசிய ரீதியில் காணப்படும் எதிர்பார்ப்பை அடைந்துகொள்வதற்கு பாராளுமன்ற குழு முறைமையை மேலும் வலுப்படுத்தலாம் என்ற யோசனையையும் ஜனாதிபதியிடம் முன்வைத்தேன்' என்று  தெரிவித்துள்ளார்.

பிரதமர் பதவிக்கு நிலவும் வெற்றிடம் தொடர்பில் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ''பாராளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவைக் கொண்டவர் பிரமராவார். எனது கட்சியின் நான் மாத்திரமே இருப்பதால் என்னால் பிரதமரை நியமிக்க முடியாது.'' என்று பதிலளித்தார். எவ்வாறிருப்பினும் அரசியலமைப்பின் பிரகாரம் பிரதமரை நியமிக்கும் அதிகாரம் நிறைவேற்றதிகார ஜனாதிபதிக்கு காணப்படுவதாக அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02
news-image

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கோழி இறைச்சி...

2024-04-18 17:43:51
news-image

மாளிகாகந்த நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக...

2024-04-18 17:24:50
news-image

திருகோணமலை வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டிகள்...

2024-04-18 17:13:38
news-image

வரலாற்றில் இன்று : 1956 ஏப்ரல்...

2024-04-18 17:01:15